• அமைச்சர் செந்தில் பாலாஜி சிகிச்சைக்கு உதவ எய்ம்ஸ் குழு அமைப்பு..! 


அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல்நிலையை கண்காணிக்க 5 எய்ம்ஸ் மருத்துவர்கள் கொண்ட குழு இன்று அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் அமைச்சரின் உடல்நிலையை ஆய்வு செய்து, அமலாக்கத்துறைக்கு அறிக்கை தருவர் என எதிர்பார்க்கப்படுகிறது. எய்ம்ஸ் மருத்துவர்களை கொண்ட குழுவில் இருதய சிகிச்சை நிபுணர்கள் இடம்பெற்றுள்ளனர். இதனிடையே, காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜிக்கு, 2 அல்லது 3 நாட்களில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படும் என மக்கள் நல்வாழ்வு அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மேலும் படிக்க



  • மாநில வளர்ச்சிக்கு அடுத்த 4, 5 மாதங்கள் மிக முக்கியம் - அமைச்சர்களை அலர்ட் செய்த முதலமைச்சர்


தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு அடுத்து வரும் 4 அல்லது 5 மாதங்கள் மிகவும் அவசியம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார். தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற, முத்திரை திட்டங்கள் குறித்த சிறப்புத்திட்ட செயலாக்கத்துறை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் அனைத்து துறை அமைச்சர்களும், உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.  ஆலோசனைக்குப் பின்னர், பேசிய முதலமைச்சர், அடுத்து வரும் நான்கைந்து மாதங்கள் மாநிலத்தின் வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமான மாதங்கள். இதில் பல்வேறு துறைகளின் ஒருங்கிணைப்பு அவசியம் என அவர் உத்தரவிட்டுள்ளார். மேலும் படிக்க



  • செந்தில்பாலாஜியை பதவி நீக்க வலியுறுத்தி 21-ந் தேதி அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்


திமுக அரசை கண்டித்து வரும் 21 ஆம் தேதி அதிமுக தரப்பில் அனைத்து மாவட்டங்களில் கண்டன் ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.இது தொடர்பான அறிக்கையில், ”  தமிழகத்தில் நடைபெற்று வரும் பல்வேறு ஊழல் முறைகேடுகள், அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி உயர்வு, சட்டம்-ஒழுங்கு சீர்கேடுகள் முதலானவற்றை கட்டுப்படுத்தத் தவறிய விடியா திமுக அரசைக் கண்டித்தும்; லஞ்ச வழக்கில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டுள்ள திமுக அமைச்சர் செந்தில்பாலாஜியை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  மேலும் படிக்க



  • பாலியல் வழக்கு - முன்னாள் டிஜிபி ராஜேஸ் தாஸிற்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை.. நீதிமன்றம் அதிரடி


பெண் எஸ்பிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், முன்னாள் டிஜிபி ராஜேஸ் தாஸை குற்றவாளி என அறிவித்த விழுப்புரம் குற்றவியல் நீதிமன்றம், அவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது.இதையடுத்து உடனடியாக அதே நீதிமன்றத்தில் ஜாமின் கோரி ராஜேஸ் தாஸ் மனுதாக்கல் செய்தார். அதனை விசாரித்த நீதிமன்றம், ஜாமின் வழங்கியதோடு, 30 நாட்களுக்குள் விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவும் அவகாசம் வழங்கியது. தவறினால் அவர் மீது உடனடியாக கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க



  • ‘மாட்டிவிடுவோம் என்ற பயம்.. ஆ.ராசா, கனிமொழி கைதில் கூட ஆர்ப்பாட்டம் இல்லை’- எடப்பாடி பழனிசாமி


தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (15.06 2023) காணொளி வாயிலாக வெளியிட்ட கருத்திற்கு இன்று  எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பதிலுரை அளித்துள்ளார். அதில் எங்கே இதை எல்லாம் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையிடம் சொல்லிவிடுவாரோ என்ற பயத்தில் முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் செந்தில் பாலாஜியை மருத்துவமனையில் சென்று பார்க்கின்றனர் என தெரிவித்துள்ளார். மேலும் படிக்க