கள் இறக்க தடையை தமிழக அரசு விலக்கி கொள்ள வேண்டுமென்று கரூரில் கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்க மாநிலத்தலைவர் சண்முகம் வலியுறுத்தியுள்ளார்.


 




 


கரூரில் கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு, கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்க மாநிலத்தலைவர் சண்முகம் தலைமை வகித்தார். மாவட்ட விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு மற்றும் காவிரி, வைகை, குண்டாறு இணைப்பு சங்க நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டு,  புதுக்கோட்டையில் நடைபெறும் உழவர் தின பேரணி மற்றும் கோரிக்கை மாநாட்டில் அனைவரும் கலந்து கொண்டு, மத்திய, மாநில அரசுகளை விவசாயிகளுக்கான கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில் கலந்து கொள்ள வேண்டுமென்று தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது.


 




 


பின்னர், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அதன் தலைவர் சண்முகம்,  ”100 நாள் வேலைவாய்ப்பு த்திட்டத்தினை முழுமையாக ஒதுக்கிட வேண்டும். பாமாயில் இறக்குமதியினை தடை செய்ய வேண்டும். ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணையினை விநியோகம் செய்ய வேண்டும். கொப்பரை கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும். கொப்பரையை விட தேங்காய்களையே அரசாங்கம் மொத்தமாக கொள்முதல் செய்ய வேண்டும். தமிழகத்தை விட மற்ற மாநிலங்களில் கள் இறக்குவதற்கு தடை இல்லை, ஆனால் தமிழகத்தில் மட்டும் கள்ளுக்கு தடை விதித்துள்ளது தான் கேள்விக்குறியாக உள்ளது. ஆகையால் தமிழகத்தில் கள்ளுக்கு உண்டான தடையை விலக்க வேண்டும்.


 




கொள்முதல் நிலையங்களில் உள்ள லஞ்ச லாவன்யங்களை களைய வேண்டும். குறிப்பாக எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருக்கும் பொழுது கொப்பரை கொள்முதல் விலையை உயர்த்தக் கோரி கோரிக்கை வைத்த பொழுது, மத்திய அரசுக்கு 150 ரூபாய் நிர்ணயம் செய்ய வேண்டும் என்ற பரிந்துரையை எங்கள் முன்னிலையில் பேசியதே குறிப்பிட விரும்புகிறோம். புதுக்கோட்டையில் நீண்ட நாட்களாக காவேரி குண்டாறு இணைப்பு திட்டம் நிறைவேற்றி இருப்பதால் இந்த மாநாட்டிற்கு புதுக்கோட்டையைச் சார்ந்த முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் சிறப்பு அழைப்பாளராக அழைத்து இருக்கின்றோம். அந்த மாநாட்டை சிறப்பிக்க வேண்டும் என்பதற்காக இந்த மாநில செயற்குழுவை கூட்டியிருக்கிறோம்” என்றார்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண