TN Headlines Today July 01: 


மகளிர் உரிமைத்தொகை ரூ.1000 : திட்ட சிறப்பு அதிகாரியாக இளம்பகவத் நியமனம்.. தமிழ்நாடு அரசு அதிரடி..!


உயர்கல்வித்துறை செயலாளராக கார்த்திக் ஐ.ஏ.எஸ் நியமிக்கப்பட்டுள்ளார் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறை செயலாளராக கார்த்திகேயன் ஐ.ஏ.எஸ் நியமிக்கப்பட்டுள்ளார். அவரை தொடர்ந்து கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளத்துறை செயலாளராக மங்கத்ராம் ஷர்மா நியமிக்கப்பட்டுள்ளார். நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் ஆனந்த் மோகன், சென்னை மாநகராட்சி (வருவாய்-நிதி) துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் படிக்க https://tamil.abplive.com/news/tamil-nadu/ias-officers-transfers-and-posting-ilam-bagavath-for-women-right-subsidy-rs-1000-126273/amp


Gemini Bridge: சென்னையின் முக்கிய அடையாளம்... இன்றுடன் 50 ஆண்டுகளை நிறைவு செய்த ஜெமினி ப்ரிட்ஜ்.. சுவாரஸ்யங்கள் இதோ..







ஜெமினி ப்ரிட்ஜ் என்று சென்னை வாசிகளால் அன்போடு அழைக்கப்படும் அண்ணா மேம்பாலம் இன்றோடு திறக்கப்பட்டு, 50 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. கடந்த 1973 ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்ட இந்த மேம்பாலம் ஜூலை 1-ஆம் தேதி 1973 ம் ஆண்டு போக்குவரத்துக்காக திறக்கப்பட்டது.  அண்ணா மேம்பாலம் தென்கிழக்கு ஆசியாவின் முதல் மேம்பாலமாகவும்,  சென்னையில் கட்டப்பட்ட முதல் மேம்பாலமாகவும் தனி சிறப்பை இன்று வரை பெற்றுள்ளது. இந்த மேம்பாலம் கட்டப்பட்டபோது இந்தியாவிலேயே நீண்ட பாலமாக திகழ்ந்தது. மேலும் படிக்க https://tamil.abplive.com/news/chennai/anna-fly-over-known-as-the-gemini-bridge-has-completed-its-50th-anniversary-today-126209/amp


TN Rain Alert: குடையுடன் ரெடியா இருங்க மக்களே.. அடுத்த 3 நாட்களுக்கு கனமழையாம்.. எந்தெந்த மாவட்டங்களில்? சில்லென்ற வானிலை அப்டேட்..






தெற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் வளி மண்டல சுழற்சி நிலவுகிறது. மேலும் மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழ்நாட்டில்  நாளை முதல் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில்  ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும்.  மேலும் படிக்க https://tamil.abplive.com/news/tamil-nadu/chennai-and-other-districts-of-tamil-nadu-are-likely-to-experience-heavy-rains-for-the-next-few-days-the-meteorological-department-said-126204/amp


Governor RN Ravi : சனாதன தர்மம் உருவாக காரணமாக இருந்தது தமிழ்நாடு.. ஆளுநர் ஆர்.என். ரவி கருத்து..






தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி, சனாதன தர்மத்திற்கு ஆதரவாக பேசி வருவது பெரும் சர்ச்சையை கிளப்பி வருகிறது. சமீபத்தில், வடலூரில் வள்ளலாரின் 200ஆவது ஜெயந்தி விழாவில் உரையாற்றிய அவர், சனாதன தர்மத்தைப் பற்றி விரிவாகக் குறிப்பிட்டு, அதை வள்ளலார் பின்பற்றியதாக கூறினார்."பத்தாயிரம் ஆண்டுகால பாரம்பரியத்தைக் கொண்ட சனாதன தர்மத்தின் உச்ச நட்சத்திரம் வள்ளலார் பெருமான். மேலும் படிக்க https://tamil.abplive.com/news/tamil-nadu/governor-rn-ravi-on-sanatana-dharma-says-tamil-nadu-was-the-reason-for-the-foundation-of-sanatana-dharma-126244/amp


Government Jobs: இனி அரசு பணியிடங்களில் முதல் பட்டதாரிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.. அதிரடி உத்தரவு..





















மனித வள மேலாண்மைத்துறையின் 2021-2022-ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கை தொடர்பான உரையின்போது, வேலைவாய்ப்பகங்கள் வழியாக நிரப்பப்படுகின்ற அரசுப் பணியிடங்களில் பின்வரும் இனத்தவருக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என சட்டமன்ற பேரவையில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. கொரோனா தொற்றால் பெற்றோர் இருவரையும் இழந்த இளைஞர்கள்,  முதல் தலைமுறைப் பட்டதாரிகள் மற்றும் தமிழக அரசுப் பள்ளிகளில் தமிழ் மொழியில் பயின்ற நபர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். மேலும் படிக்க https://tamil.abplive.com/news/tamil-nadu/the-revenue-department-has-issued-an-order-to-give-priority-to-first-generation-graduates-in-government-jobs-126219/amp