உயர்கல்வித்துறை செயலாளராக கார்த்திக் ஐ.ஏ.எஸ் நியமிக்கப்பட்டுள்ளார் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறை செயலாளராக கார்த்திகேயன் ஐ.ஏ.எஸ் நியமிக்கப்பட்டுள்ளார். அவரை தொடர்ந்து கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளத்துறை செயலாளராக மங்கத்ராம் ஷர்மா நியமிக்கப்பட்டுள்ளார்.
நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் மாற்றம்:
நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் ஆனந்த் மோகன், சென்னை மாநகராட்சி (வருவாய்-நிதி) துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மகளிர் உரிமைத்தொகை திட்ட சிறப்பு அதிகாரியாக இளம்பகவத் ஐஏஎஸ்க்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. செப்டம்பர் மாதம் முதல் மகளிர் உரிமைத் தொகை திட்டம் செயல்படுத்தப்படவுள்ள நிலையில் அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக இணை மேலாண் இயக்குநராக விஷு மகாஜனும், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிறபடுத்தப்பட்டோர் நலத்துறை செயலாளராக ரீத்தா ஹரீஷ் தக்கரும் நியமிக்கப்பட்டுள்ளார்.
கலைஞர் நூற்றாண்டு விழா தொடர்பான நிகழ்ச்சிகளை மேற்பார்வை செய்ய தனி அதிகாரியாக சுப்பையன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் நிர்வாக இயக்குநராக ஏ.அண்ணாதுரை நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் அர்ச்சனா பட்நாயக், மருத்துவ பணியாளர் தேர்வு வாரிய தலைவராக கூடுதல் பொறுப்பு வகிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.