• 'தமிழ்நாடு' - சொல் அல்ல; தமிழரின் உயிர் - தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ட்வீட்..


தமிழ்நாடு நாள் இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது டிவிட்டரில் இது தொடர்பாக் பதிவு செய்துள்ளார். அதில், “தமிழ்நாடு' - சொல் அல்ல; தமிழரின் உயிர். இத்தகைய வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த நாளில்  தமிழ்நாட்டை அனைத்துத் துறைகளிலும் முதன்மை மாநிலமாக்கிடப் பாடுபட உறுதியேற்போம்! தனித்துவமிக்க தமிழ்நாட்டின் ஒளி இந்தியா முழுதும் பரவட்டும்! தமிழ்நாடு வாழ்க! தமிழ்நாடு வாழ்க! தமிழ்நாடு வாழ்க!” என குறிப்பிட்டுள்ளார். மேலும் படிக்க



  • உயர்நீதிமன்ற உத்தரவிற்கு எதிராக  உச்சநீதிமன்றத்தில் செந்தில்பாலாஜி மேல்முறையீடு...!  


ஆட்கொணர்வு மனு தொடர்பாக  சென்னை உயர்நீதிமன்ற உத்தரவிற்கு எதிராக அமைச்சர் செந்தில்பாலாஜி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். செந்தில்பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்தது செல்லும், கைது நடவடிக்கை சட்டவிரோதம் இல்லை எனவும், சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.  இதற்கிடையில் நேற்று காவேரி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு, புழல் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார். மேலும் படிக்க



  • திமுக துணை நிற்கும்.. அமைச்சர் பொன்முடியுடன் ஃபோனில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின்'


உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகனும் நாடாளுமன்ற உறுப்பினருமான கௌதம சிகாமணி ஆகியோருக்குச் சொந்தமான இடங்களில் நேற்று காலை முதல் அமலாக்கத்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர்.  இதனைத்தொடர்ந்து அமலாக்கத்துறை அலுவலகத்தில் அவரிடம் விசாரணை நடைபெற்றது. இந்தநிலையில், அமைச்சர் பொன்முடியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினார்.அமலாக்கத்துறையினர் நடத்திய விசாரணை விவரங்களை கேட்டறிந்த முதலமைச்சர், துணிச்சலுடனும் சட்ட ரீதியாகவும் எதிர்கொள்ளுமாறு அறிவுரை கூறியதாக சொல்லப்படுகிறது. மேலும் படிக்க



  • டெண்டர் முறைகேடு தொடர்பாக எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான ஆர்.எஸ் பாரதி மனு தள்ளுபடி.. உயர்நீதிமன்றம் அதிரடி..


ஈபிஎஸ் மீதான டெண்டர் முறைகேடு புகாரை விசாரிக்கக்கோரிய ஆர்.எஸ் பாரதி மனு சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மேலும் ஆரம்பக்கட்ட விசாரணையில் குறைபாடு காணமுடியாது என்றும் ஆட்சி மாற்றம் காரணமாக விசாரணை தேவையில்லை என்றும் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தெரிவித்துள்ளார். முந்தைய அதிமுக ஆட்சி காலத்தில் நெடுஞ்சாலைத் துறையில் டெண்டர் கோரியதில் 4 ஆயிரத்து 800 கோடி ரூபாய் அளவிற்கு முறைகேடு நடந்துள்ளதாக வழக்கு தொடரப்பட்டது. மேலும் படிக்க



  • அமைச்சர் பொன்முடியிடம் விடிய விடிய விசாரணை.. மாலை 4 மணிக்கு ஆஜராக அமலாக்கத்துறை சம்மன்


அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகனும் நாடாளுமன்ற உறுப்பினருமான கவுதம சிகாமணி ஆகியோருக்குச் சொந்தமான இடங்களில் நேற்று காலை முதல் அமலாக்கத்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். தொடர்ந்து, வாக்குமூலம் பெறுவதற்காக அமைச்சர் அமலாக்கத்துறையினரால் அழைத்துச் செல்லப்பட்டார். விடிய விடிய  விசாரணை நடத்தப்பட்டு அதிகாலை 3 மணியளவில் அமைச்சர் பொன்முடி அங்கிருந்து அனுப்பப்பட்டார். இதைதொடர்ந்து, மீண்டும் இன்று மாலை 4 மணிக்கு அமைச்சர் விசாரணக்கு ஆஜராக வேண்டும் என அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. மேலும் படிக்க