சென்னை உயர்நீதிமன்ற உத்தரவிற்கு எதிராக அமைச்சர் செந்தில்பாலாஜி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். இதையடுத்து, ஆட்கொணர்வு மனு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் அளித்த உத்தரவிற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். 


செந்தில்பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்தது செல்லும், கைது நடவடிக்கை சட்டவிரோதம் இல்லை என 


முன்னதாக, ஆட்கொணர்வு மனுவில் நீதிபதிகள் நிஷா பானு, பரத சக்கரவர்த்தி இருவேறு தீர்ப்புகளை வழங்கியிருந்தனர். ஏற்கனவே, இந்த வழக்கில் அமலாக்கத்துறை கேவியட் மனு தாக்கல் செய்திருந்த நிலையில் செந்தில் பாலாஜி மனுதாக்கல் செய்திருந்தார். இந்தநிலையில், அமலாக்கத்துறை கைது செய்தது செல்லும் என்ற உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி மேல்முறையீடு செய்துள்ளார். 


புழல் சிறைக்கு மாற்றப்பட்ட செந்தில் பாலாஜி: 


கடந்த ஜூன் மாதம் 13ம் தேதி நள்ளிரவில் மின்சாரத்துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். அப்போது, அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதன் காரணமாக ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பரிசோதனையில் அவருக்கு இதயத்திற்கு செல்லும் ரத்த குழாயில் 4 அடைப்புகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து, அவரது மனைவி மேகலாவின் கோரிக்கையின் படி, காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அதன்பிறகு பரிசோதனை மேற்கொண்ட மருத்துவர்கள், பைபாஸ் அறுவை சிகிச்சை மேற்கொண்டு, தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர்.


இந்நிலையில், நேற்று காவேரி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு, புழல் சிறைக்கு ஆம்புலன்ஸில் கொண்டு செல்லப்பட்டார். புழல் சிறையில் முதல் வகுப்பில் செந்தில் பாலாஜியை அடைப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வந்தநிலையில், புழலில் உள்ள சிறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அனுமதிக்கப்பட்ட சில நிமிடங்களிலேயே அவருக்கு அங்குள்ள மருத்துவர்களால் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. 




கடந்த 28 ஆம் தேதியுடன் செந்தில் பாலாஜிக்கு 14 நாட்கள் நீதிமன்றக் காவல் முடிவடைந்தது. அப்போது, மருத்துவமனையில் இருந்தபடியே செந்தில் பாலாஜி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன்பு காணொளி வாயிலாக ஆஜரானார். அவரிடம் உடல்நிலை குறித்து கேட்டறிந்த நீதிபதி அல்லி, அவருக்கு வழங்கப்பட்டிருந்த நீதிமன்றக் காவலை ஜூலை 12 -ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டார். அதன்படி, அவருக்கு ஜூலை 12ஆம் தேதியுடன் நீதிமன்ற காவல் நிறைவடைய இருந்தது.


தொடர்ந்து, நீதிமன்றம் காவலை நீட்டிப்பது தொடர்பான வழக்கு விசாரணைக்காக அவர்  காவேரி மருத்துவமனையில் இருந்து காணொளி வாயிலாக  ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, அவருக்கு மேலும் 14 நாட்கள் காவல் நீட்டிக்கப்பட்டது. செந்தில் பாலாஜிக்கு ஜூலை 26-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலை நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது குறிப்பிடத்தக்கது.