• கடலில் இல்லையாமே.. கலைஞரின் பேனா நினைவுச் சின்னத்தை வேறு இடத்தில் அமைக்க முதலமைச்சர் விருப்பம்?




முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதிக்கு சென்னை மெரினாகடலில் பேனா நினைவுச் சின்னம் அமைக்க தமிழ்நாடு அரசு முடிவெடுத்து மத்திய அரசிடம் அனுமதியும் பெற்றிருந்தது. இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கடற்கரைப் பகுதியில் உள்ள  முன்னாள் முதலமைச்சர்கருணாநிதியின்  நினைவிடத்திலேயே பேனா சின்னம் அமைக்க விரும்புவதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இதுவரை வெளியாகவில்லை. மேலும் படிக்க மேலும் படிக்க



  • கும்பகோணம் பள்ளி தீ விபத்து 19-வது ஆண்டு நினைவுதினம் இன்று..


ஒட்டுமொத்த தமிழ்நாட்டையே உலுக்கிய கும்பகோணம் தீ விபத்தில் உயிரிழந்த 94 குழந்தைளின், 19ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.மதிய உணவு தயாரிக்கும்போது பரவிய தீயால் நேர்ந்த இந்த கோர விபத்து, ஒட்டுமொத்த தமிழ்நாட்டையே உலுக்கி எடுத்தது. இந்த சம்பவத்தின் விளைவாகதான், தமிழ்நாடு முழுவதும் பள்ளிகளுக்கு புதிய கட்டமைப்புகளும் , விதிகளும் அமல்படுத்தப்பட்டன. மேலும் படிக்க



  • நான் அப்படிப்பட்டவன் இல்லை, நிரூபித்து காட்டுவேன்" ட்விட்டரில் ரிப்ளை கொடுத்த ஆர்.கே.சுரேஷ்


ஆருத்ரா நிதி  நிறுவனம்  பொதுமக்களிடமிருந்து சுமார் 13 ஆயிரத்து 700 கோடி ரூபாய் மோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த விவகாரத்தில் கடந்த சில மாதங்களாக பலரும் கைது செய்யப்பட்ட நிலையில், நடிகர் ஆர்.கே.சுரேஷ் தலைமறைவாக உள்ளார். இதனிடையே நேற்று முன்தினம் ட்விட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டு நீக்கினார். இந்தநிலையில், தனக்கு எதிராக ட்விட்டரில் பதிவு செய்த நபருக்கு ரிப்ளை கொடுத்துள்ளார் நடிகர் ஆர்.கே.சுரேஷ், " நான் அப்படிப்பட்டவன் இல்லைபா, என்னை நான் நிரூபிப்பேன் நன்றி’ என தெரிவித்துள்ளார். மேலும் படிக்க



  • தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 7 தினங்களுக்கு மழைக்கு வாய்ப்பு...


தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 7 தினங்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று மற்றும் 22 ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யலாம் என தெரிவித்துள்ளது. சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை  பெய்யக்கூடும்.மேலும் படிக்க



  • சுதந்திர போராட்ட தியாகி சங்கரய்யாவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் : முதலமைச்சர் ஸ்டாலின் 


பொதுவுடைமைத் தலைவர் தியாகி சங்கரய்யாவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்க ஆவன செய்யப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நேற்று 102வது பிறந்தநாள் காணும் சங்கரய்யாவுக்கு 2 ஆண்டுக்கு முன் தகைசால் தமிழர் விருது வழங்கி அரசு கௌரவித்தது. ஏழை, எளியோருக்காக தன் வாழ்நாளை அர்ப்பணித்த சங்கரய்யாவை பெருமைப்படுத்தும் வகையில் அவருக்கு டாக்டர் பட்டம் வழங்க வேண்டும். மதுரை அமெரிக்கன் கல்லூரியில் படித்தபோது ஆங்கிலேயருக்கு எதிராக போராட்டம் நடத்தி சிறை சென்றவர் சங்கரய்யா என முதலமைச்சர் ஸ்டாலில் புகழாரம் சூட்டியுள்ளார். மேலும் படிக்க