ஒட்டுமொத்த தமிழ்நாட்டையே உலுக்கிய கும்பகோணம் தீ விபத்தில் உயிரிழந்த 94 குழந்தைளின், 19ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.
கும்பகோணம் தீ விபத்து:
கும்பகோணம் காசிராமன் தெருவில் உள்ள அரசு உதவி பெறும் ஸ்ரீகிருஷ்ணா பள்ளியில், கடந்த 2004ம் ஆண்டு ஜுலை 16ம் தேதி எதிர்பாராத விதமாக திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில், அந்த பள்ளியில் பயின்று வந்த 1 முதல் 5ம் வகுப்பு வரையிலான 94 குழந்தைகள் தீயில் கருகி இறந்தனர். பலியானவர்கள் அனைவரும் 7 முதல் 11 வயதுக்கு உட்பட்டவர்கள் ஆவார்கள், 18 குழந்தைகள் படுகாயமடைந்தனர். மதிய உணவு தயாரிக்கும்போது பரவிய தீயால் நேர்ந்த இந்த கோர விபத்து, ஒட்டுமொத்த தமிழ்நாட்டையே உலுக்கி எடுத்தது. இந்த சம்பவத்தின் விளைவாகதான், தமிழ்நாடு முழுவதும் பள்ளிகளுக்கு புதிய கட்டமைப்புகளும் , விதிகளும் அமல்படுத்தப்பட்டன. இதனிடையே, விபத்தில் பலியான குழந்தைகளின் 19வது ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.
பெற்றோர் நினைவஞ்சலி:
குழந்தைகளை இழந்த பெற்றோர் அவரவர் வீடுகளில் இறந்த குழந்தைகளின் புகைப்படங்களுக்கு மாலை அணிவித்து, குழந்தைகளுக்கு பிடித்த தின்பண்டங்களையும், புத்தாடைகளையும் வைத்து படையலிட்டு வருகின்றனர். தீ விபத்து சம்பவம் நிகழ்ந்த காசிராமன் தெருவில் உள்ள பள்ளி முன்பாக, 94 குழந்தைகளின் படங்களுடன் வைக்கப்பட்டுள்ள பேனரை மலர்களால் அலங்கரித்து பாதிக்கப்பட்ட பெற்றோர், உறவினர்கள், காயமடைந்த மாணவர்கள், பொதுமக்கள், அரசியல் கட்சியினர், தன்னார்வ அமைப்பினர் மலர் தூவியும், மெழுகுவர்த்தி ஏற்றியும், மலர் வளையம் வைத்தும் அஞ்சலி செலுத்துகின்றனர். மறைந்த தங்களது குழந்தைகளின் புகைப்படங்களை பார்த்து, பெற்றோர் கண்ணீல் மல்க அஞ்சலி செலுத்தும் காட்சிகள் காண்போரின் மனதை இன்றும் ரணமாக்குகிறது. இதையடுத்து, 94 குழந்தைகளின் பெற்றோர்களும் பழைய பாலக்கரையில் அரசால் அமைக்கப்பட்டுள்ள இறந்த குழந்தைகளின் நினைவிடத்துக்கு சென்று மாலை அணிவித்தும் பூக்களைத் தூவியும் மவுன அஞ்சலியும் செலுத்த உள்ளனர்.
நிறைவேறாத கோரிக்கை:
கும்பகோணம் தீ விபத்தில் குழந்தைகள் இறந்த பின்னர் தமிழகம் முழுவதும் பள்ளிக்கூடங்கள் கூரையிலிருந்து கட்டடங்களாக மாற்றப்பட்டன. எனவே, இறந்த குழந்தைகளின் நினைவாக ஜூலை 16-ம் தேதியை குழந்தைகள் பாதுகாப்பு தினமாகவும், அன்றைய தினம் பள்ளிகளுக்கு உள்ளூர் விடுமுறையும், படுகாயமடைந்த குழந்தைகள் தற்போது கல்லூரிப் படிப்பை நிறைவு செய்துள்ளதால் அவர்களுக்கு அரசு வேலை வாய்ப்பும் தர வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால், இதுநாள் வரையில் அரசு தரப்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
கல்வி உரிமைப் பேரணி:
இதனிடயே, நீட் தேர்வை எதிர்ப்பதுடன், புதிய துறைகளில் இந்திமயம், வணிகமயம், கல்வித் துறையில் ச விபத்தில் உயிரிழந்த 94 குழந்தைகளை நினைவு கூறும் வகையிலும் இன்று கும்பகோணம் இளைஞர் அரண் சார்பில் கல்வி உரிமை பேரணி மற்றும் மாநாடு நடைபெற உள்ளது.