- Chennai Bomb Threat: பரபரப்பு… சென்னையில் பிரபல பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்- காவல்துறை சோதனை
சென்னையில் உள்ள பிரபல தனியார் பள்ளிகளுக்கு மர்ம நபர், மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததால், பரபரப்பு ஏற்பட்டது. கோபாலபுரம், ஜெ.ஜெ.நகர், ஆர்.ஏ.புரம், அண்ணாநகர், பாரிமுனை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் காவல் துறையினர், மோப்ப நாய் உதவியுடன் சோதனைகளை நடத்தி வருகின்றனர். மேலும் படிக்க
- Annamalai: பாஜக தலைவர் அண்ணாமலை தொடர்ந்த மனு.. தள்ளுபடி செய்த சென்னை உயர்நீதிமன்றம்!
சிறுபான்மையினர் குறித்து அவதூறாக பேசியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கோரி பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை தொடர்ந்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் "பேசு தமிழா பேசு" என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, இந்து மத கலாச்சாரத்தை அழிக்கும் நோக்குடன், தீபாவளி அன்று பட்டாசுகள் வெடிக்க கூடாது என்று கிறிஸ்தவ மிஷனரிகளின் துணையுடன் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது என பேசியிருந்தார். மேலும் படிக்க
- Senthil Balaji ED Raid: மீண்டும் அதிரடி.. செந்தில் பாலாஜி வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை..
கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜி இல்லத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். கரூர் மாவட்டம் ராமேஸ்வரபட்டியில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி இல்லத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்துகின்றனர். ஒரு காரில் வந்த 5க்கும் மேற்பட்ட அதிகாரிகள் தற்போது அமைச்சர் செந்தில்பாலாஜி இல்லத்தில் அவரது குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் படிக்க
- Gold Silver Rate: குறையும் தங்கம் விலை.. சவரனுக்கு ரூ.80 குறைந்தது.. இன்றைய நிலவரம்..
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.46,720 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 22 காரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ.5,840 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. 24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.50,480 ஆகவும் கிராம் ஒன்று ரூ.6,310 ஆகவும் விற்பனையாகிறது. மேலும் படிக்க
- TN Weather Update: மீண்டும் மழை.. வடகடலோர மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை.. வானிலை நிலவரம் இதோ..
தமிழ்நாட்டில் அடுத்த சில நாட்களுக்கு வறண்ட வானிலையே இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி இன்று, தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது. மேலும் படிக்க