• கோவையில் அண்ணாமலை வேட்புமனு தாக்கல்; பாஜகவிற்கு ஆதரவு பெருகி வருவதாக பேட்டி


கோவை அவிநாசி சாலையில் உள்ள அண்ணா சிலை பகுதியில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொண்டர்கள் புடை சூழ ஊர்வலமாக அண்ணாமலை வந்து வேட்பு மனுத்தாக்கல் செய்தார் அண்ணாமலை. தொடர்ந்து வேட்பு மனு தாக்கல் செய்யும் பகுதியில் இருந்து 200 மீட்டர் தொலைவில் உள்ள செஞ்சிலுவைச் சங்க கட்டிடம் அருகே கூட்டத்தினரை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். மேலும் படிக்க



  • PMK Manifesto: மகளிருக்கு மாதம் ரூ.3000, பெண் குழந்தைக்கு ரூ.10 லட்சம், அனைத்து சாதிக்கும் இட ஒதுக்கீடு: பாமக தேர்தல் அறிக்கை வெளியீடு


தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாஜகவுடன் இணைந்து பாமக 10 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இந்த நிலையில் பாமகவின் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டு உள்ளது. 2021ஆம் ஆண்டுக்கான மக்கள்தொகை கணக்கெடுப்பை சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பாக நடத்துவதற்கு பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தும்; வெற்றிபெறும். உயர் வகுப்பு ஏழைகளுக்கு 10% வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பைத் தொடர்ந்து, இடஒதுக்கீட்டுக்கான 50% உச்ச வரம்பை நீக்குவதற்கு பாமக நடவடிக்கை மேற்கொள்ளும். மேலும் படிக்க



  • MDMK: முடியவே முடியாது..! மதிமுகவிற்கு பம்பரம் சின்னம் ஒதுக்க முடியாது - தேர்தல் ஆணையம் அதிரடி


நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியில் உள்ள மதிமுகவிற்கு, திருச்சி தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் துரை வைகோ போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டு, வேட்புமனுவும் தாக்கல் செய்துள்ளார். ஆனால், மதிமுகவிற்கு தேர்தல் ஆணையம் அக்கட்சியின் பம்பரம் சின்னத்தை ஒதுக்கவில்லை. இதையெதிர்த்து அக்கட்சி பொதுச்செயலாளர் வைகோ உயர்நீதிமன்றத்தை நாடினார். மேலும் படிக்க



  • Lok Sabha Election 2024: சிதம்பரத்தில் களமிறங்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர்.. வேட்புமனுவை தாக்கல் செய்தார் திருமா!





சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டு விசிக வேட்பாளர் தொல்.திருமாவளவன் அரியலூர் ஆட்சியர் அலுவலகத்தில் வேட்புமனுவை தாக்கல் செய்தார்.   மேலும், இன்று திருமாளவனுக்கு முன்னதாக, பாஜக தலைவர் அண்ணாமலை, பாஜக கூட்டணி கட்சியான தமாகா சார்பில் மக்களவைத் தேர்தலுக்கு போட்டியிடும் எஸ்.டி.ஆர் விஜயசீலன், தேசிய ஜனநாயக  கூட்டணி மற்றும் பாமக கட்சியின் வேட்பாளருமான அண்ணாதுரை, கரூர் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி, கோவை திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் என பலரும் வேட்புமனு தாக்கல் செய்தனர். மேலும் படிக்க



  • TN Weather Update: 100 டிகிரி பாரன்ஹீட் கடந்து பதிவான வெப்பநிலை.. அடுத்த சில நாட்களுக்கு இப்படித்தான் இருக்கும்..





27.03.2024 முதல் 31.03.2024 வரை:  தமிழகத்தில்   ஓரிரு   இடங்களில்    அதிகபட்ச    வெப்பநிலை அடுத்த ஐந்து தினங்களில்  2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக அதிகரிக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும்பொழுது  ஓரிரு இடங்களில்  அசௌகரியம் ஏற்படலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க