திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை முதல் ரேண்டமைசேசன் செய்யும் பணி மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் தெ.பாஸ்கர பாண்டியன்  மேற்கொள்ளப்பட்டது.


இந்திய தேர்தல் ஆணையத்தின் அட்டவணையின்படி 2024-ஆம் ஆண்டிற்கான பாராளுமன்ற தேர்தல் திருவண்ணாமலை மாவட்டத்தில் 19.04.2024 அன்று நடைபெறவுள்ளது. இது தொடர்பாக திருவண்ணாமலை மற்றும் ஆரணி ஆகிய இரண்டு பாராளுமன்ற தொகுதிகளுக்குரிய மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை இன்று அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளின் முன்னிலையில் ‘முதல் ரேண்டமைசேசன்” பணி மேற்கொள்ளப்பட்டது. பின்னர் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கிடங்கின் அறைக்கதவுகள் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களால் திறக்கப்பட்டு 8 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் உரிய பாதுகாப்புடன் அனுப்பப்படுகிறது.


மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை ஒரு சட்டமன்ற தொகுதிக்கு 3 லாரிகள் வீதம் 24 லாரிகளில் சம்மந்தப்பட்ட வட்டாட்சியர் அலுவலகங்களில் அமைக்கப்பட்டுள்ள 8 சட்டமன்ற தொகுதிக்கான விநியோக மையங்களுக்கு உரிய காவல்துறை பாதுகாப்புடன் ஜிபிஎஸ்  பொருத்தப்பட்டு அனுப்பி வைக்கப்படுகிறது. மேலும் அவை கீழ்க்கண்ட இடங்களில் வைத்து பாதுகாக்கப்படுகிறது.


 





சட்டமன்ற தொகுதி வாரியாக பாதுகாக்கப்படும் விவரங்கள்


1).செங்கம் (தனி) வட்டாட்சியர் அலுவலகம், பழைய நீதிமன்ற கட்டிடம் - வாக்களிக்கும் இயந்திரம் (BU)-387, 87இ கட்டுப்பாட்டு அலகு (CU) -387, VVPAT-419,


2).திருவண்ணாமலை வட்டாட்சியர் அலுவலகம் (பழைய கணிணி அறை) - வாக்களிக்கும் இயந்திரம் (BU)-361 கட்டுப்பாட்டு அலகு (CU)-361, VVPAT-384,


3).கீழ்பென்னாத்தூர் வட்டாட்சியர் அலுவலகம் முதல் தளம்- வாக்களிக்கும் இயந்திரம் (BU)-338, கட்டுப்பாட்டு அலகு (CU)-338, VVPAT-370,


4).கலசபாக்கம் வட்டாட்சியர் அலுவலகம் முதல் தளம் (ஆய்வு கூட்டரங்கம்)- வாக்களிக்கும் இயந்திரம் (BU)-337,கட்டுப்பாட்டு அலகு (CU)-337, VVPAT-365,


5).போளூர்  வட்டாட்சியர் அலுவலகம் முதல் தளம் ஆய்வு கூட்டரங்கம்- வாக்களிக்கும் இயந்திரம் (BU)-342, கட்டுப்பாட்டு அலகு (CU)-342, VVPAT-370,6)


6).ஆரணி வட்டாட்சியர் அலுவலகம் முதல் தளம் - வாக்களிக்கும் இயந்திரம் (BU)-373, கட்டுப்பாட்டு அலகு (CU)-373, VVPAT-404,


7).செய்யார் மக்கள் குறைதீர்வு கூட்டரங்கம்  சார் ஆட்சியர் அலுவலகம்- வாக்களிக்கும் இயந்திரம் (BU)-373, கட்டுப்பாட்டு அலகு (CU)-373, VVPAT-404,


8).வந்தவாசி (தனி) வட்டாட்சியர் அலுவலக கூட்டரங்கம்- வாக்களிக்கும் இயந்திரம் (BU)-338, கட்டுப்பாட்டு அலகு (CU)-338, VVPAT-364 என மொத்தம் 2853 வாக்களிக்கும் இயந்திரங்களும் (BU), 2853 கட்டுப்பாட்டு அலகுகளும்(CU), 3080 VVPAT களும் மேற்படி எட்டு சட்டமன்ற தொகுதிகளுக்கும் அனுப்பப்படுகிறது. இந்நிகழ்வில் ஆரணி பாராளுமன்ற தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் மரு.மு.பிரியதர்ஷினி, செய்யார் சார் ஆட்சியர் செல்வி பல்லவி வர்மா திருவண்ணாமலை வருவாய் கோட்டாட்சியர் மந்தாகினி, மாவட்ட ஆட்சித்தலைவரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்கள்) குமரன் மற்றும் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் தேர்தல் அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.