• Chief Minister M. K. Stalin: தமிழ்நாட்டில் சிஏஏ-ஐ விட மாட்டோம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி


சி.ஏ.ஏ. சட்டத்தை தமிழ்நாட்டில் அனுமதிக்க மாட்டோம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் (எக்ஸ்) பக்கத்தில் பதிவிட்டதாவது, “ஏழு நாட்களில் மேற்கு வங்கம் மட்டுமல்லாது இந்தியா முழுவதும் CAA நடைமுறைப்படுத்தப்படும் என்று கூறியிருக்கிறார். பா.ஜ.க.வைச் சேர்ந்த ஒன்றிய இணையமைச்சர் ஒருவர். இலங்கைத் தமிழர்களுக்கும் இசுலாமியர்களுக்கும் எதிரான CAB சட்டம் ஆனதற்கு முழுமுதற்காரணமே நாடாளுமன்றத்தில் அ.தி.மு.க ஆதரித்து வாக்களித்ததுதான். மேலும் படிக்க



  • Sanatan Row: விஸ்வரூபம் எடுக்கும் சனாதன சர்ச்சை: உதயநிதிக்கு பிப்ரவரியில் நாள் குறித்த பாட்னா நீதிமன்றம்!


சனாதன தர்மம் பற்றி சர்ச்சைக்குரிய  கருத்துக்களை தெரிவித்ததாக கூறப்படும் விவகாரத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் ஆஜராக பாட்னா நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது. வரும் பிப்ரவரி 13 ஆம் தேதிக்குள் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.  மேலும் படிக்க



  • Kilambakkam Bus: இனி குழப்பம் வேண்டாம்.. கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தின் நடைமேடை விவரம் வெளியீடு..


சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு செல்லும் பொதுமக்கள் எளிதாக பயணம் மேற்கொள்வதை உறுதி செய்யும் நோக்கில், வண்டலூர் அடுத்த கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து முனையம் கட்டப்பட்டுள்ளது. 59.86 ஏக்கர் நிலப்பரப்பில் ரூ.393 கோடியே 74 லட்சம் மதிப்பீட்டில் நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் புறநகர் பேருந்து நிலையம் கட்டப்பட்டுள்ளது. மேலும் படிக்க



  • IRS Officer: நிர்மலா சீதாராமனுக்கு எதிராக பேசிய ஐ.ஆர்.எஸ். அதிகாரி பாலமுருகன் சஸ்பெண்ட்..! நடந்தது என்ன?


நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு எதிராக பேசிய தமிழகத்தைச் சேர்ந்த, ஐ.ஆர். எஸ் அதிகாரி பாலமுருகனை பணியிடைநீக்கம் செய்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இவர் தமிழ்நாடு, புதுச்சேரி மண்டல ஜி.எஸ்.டி. துணை ஆணையராக பதவி வகித்து வந்தார். சேலம் விவசாயிகளுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியதற்கு எதிர்ப்பு தெரிவித்ததோடு, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதவி விலக வேண்டும் எனவும் கடிதம் எழுதி பரபரப்பை ஏற்படுத்டி இருந்தார். மேலும் படிக்க



  • “திமுகவின் ஏடிஎம் எ.வ.வேலு” - திருவண்ணாமலையில் அண்ணாமலை காரசார விமர்சனம்


என் மண் என் மக்கள் நடைபயணத்தின் ஒரு பகுதியாக திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம், கீழ்பெண்ணாத்தூர் மற்றும் திருவண்ணாமலை ஆகிய தொகுதிகளில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நடைபயணம் மேற்கொண்டு பொதுமக்களிடையே உரையாற்றினார். குறிப்பாக நேற்று இரவு 8 மணி அளவில் திருவண்ணாமலையில் நடைப்பயணம் மேற்கொண்ட பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நடைப்பயணம் முடிந்து திருவண்ணாமலை காந்தி சிலையின் முன்பாக பொதுமக்களிடையே உரையாற்றினார். மேலும் படிக்க