• NLC Issue : '5 கோடி இழப்பீடு கொடுத்தாலும் தேவையில்லை': என்.எல்.சி போராட்டத்தில் அன்புமணி ராமதாஸ் பேச்சு..


கடலூரில் என்.எல்.சி விரிவாக்க பணிகளை கண்டித்து பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் முற்றுகை போராட்டம் நடைபெற்றது. அப்போது பேசிய அன்புமணி ராமதாஸ், “300 கிராமங்களில் 300 கிராம சபை கூட்டம் நடத்தப்பட்டு தீர்மானம் போடப்பட்டது. விளைநிலங்களை கையகப்படுத்த மாட்டோம் என்ற தீர்மானம் போடப்பட்டது. ஆனால் தற்போது காவல் துறையை ஏவி, அடக்கமுறையை ஏவிவிட்டு பொக்லேன் வைத்து நிலத்தை கையகப்படுத்தி வருகின்றனர்.  மேலும் படிக்க https://tamil.abplive.com/news/tamil-nadu/anbumani-ramadoss-the-leader-of-the-pmk-has-said-that-if-the-mining-works-continue-in-the-nlc-company-a-road-blockade-will-be-held-131619/amp



  • Kodanad Case: கோடநாடு வழக்கு செப்டம்பர் 8ம் தேதிக்கு ஒத்திவைப்பு ; இடைக்கால அறிக்கை தாக்கல் செய்ய வாய்ப்பு


கோடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கு தொடர்பான விசாரணை உதகை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள குடும்ப நீதிமன்றத்தில் நீதிபதி ஸ்ரீதரன் முன்னிலையில் நடைபெற்றது. கடந்த மாதம் ஜூன் 23ஆம் தேதி மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி அப்துல் காதர் முன்னிலையில் நடைபெற்ற வழக்கு விசாரணையில் சிபிசிஐடி காவல் துறையினர், இதுவரை நடந்த விசாரணை அறிக்கையை இன்று நடைபெறும் விசாரணையில் இடைக்கால அறிக்கையாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட வேண்டும் என உத்தரவிட்டு இருந்தார். மேலும் படிக்க https://tamil.abplive.com/news/coimbatore/kodanad-heist-case-adjourned-to-september-8-in-nilgiris-court-tnn-131604/amp



  • தமிழ்நாட்டில் இப்படியா? வெப்ப அழுத்த எச்சரிக்கை கொடுத்த வானிலை மையம்.. இன்றைய வானிலை நிலவரம் இதோ..


28.07.2023 மற்றும் 29.07.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். 30.07.2023 முதல் 03.08.2023 வரை: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். 28.07.2023 மற்றும் 29.07.2023: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரியிலும் அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி முதல் 39 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்;  ஓரிரு இடங்களில் இயல்பிலிருந்து 2 – 3  டிகிரி செல்சியஸ்  அதிகமாக இருக்கக்கூடும்.  மேலும் படிக்க https://tamil.abplive.com/news/tamil-nadu/according-to-meteorological-department-there-will-be-moderate-rain-in-tamil-nadu-for-the-next-6-days-131639/amp


 



சட்டம்-ஒழுங்கு, பெண்களுக்கு பாதுகாப்பற்றத் தன்மை, போதைப் பொருட்களின் பயன்பாடு போன்றவற்றிற்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பான அறிக்கையில், “திருச்சியில் 26.7.2023 அன்று நடைபெற்ற தி.மு.க. நிர்வாகிகள் கூட்டத்தில், கொத்தடிமைகளின் தலைவராக விளங்கும் மு.க. ஸ்டாலின், மனம் போன போக்கில் புளுகு மூட்டைகளை அவிழ்த்துவிட்டிருக்கிறார். மேலும் படிக்க https://tamil.abplive.com/news/tamil-nadu/edappadi-palaniswami-urged-the-dmk-government-to-take-strict-action-against-law-and-order-insecurity-for-women-use-of-drugs-etc-131586/amp



  • அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம்..சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி கருத்து


அர்ச்சகர் நியமனத்தில் சாதிக்கு எந்த பங்கும் இல்லை. யார் வேண்டுமானாலும் அர்ச்சகர் ஆகலாம் என சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி கருத்து தெரிவித்துள்ளது. அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என தனி நீதிபதி உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் படிக்க https://tamil.abplive.com/news/tamil-nadu/madras-high-court-says-person-belonging-to-any-caste-can-become-priests-131652/amp