கரூர் காவிரி ஆற்றில் லாரியில் அனுமதியின்றி மணல் அளியதாக ஐந்து பேர் மீது வழக்கு பதிவு செய்து மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே வதியம் காவிரி ஆற்று படுகையில் டாரஸ் லாரியில் மணல் அள்ளுவதாக குளித்தலை போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன் பேரில் குளித்தலை போலீசார் சென்று பார்க்கையில் சிலர் டாரஸ் லாரியில் மணல் அள்ளுவது தெரியவந்தது.
போலீசாரை கண்டதும் அங்கிருந்தவர்கள் தப்பியோட பதில் நாமக்கல் மாவட்டம் போத்தனூர் சேர்ந்த கார்த்திக், திருச்சி மாவட்டம் தொட்டியம் பகுதியைச் சேர்ந்த சரவணன் சுதாகர் ஆகிய மூன்று பேரை சுற்றி வளைத்து பிடித்தனர்.
மணல் கடத்தலுக்கு மூல காரணமாக இருந்த குளித்தலை அண்ணாநகரை சேர்ந்த மணிகண்டன், ஜெயபால் ராஜ் ஆகிய இருவரும் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.
மூன்று பேரையும் கைது செய்த குளித்தலை போலீசார் லாரியையும், 4 1/2 யூனிட் மணலையும் பறிமுதல் செய்து,வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர். மேலும் தப்பி ஓடிய மணிகண்டன் ஜெயபால்ராஜ் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.
ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்