ஐபிஎல் 2023 சீசன் தொடக்க ஆட்டத்தில் நரேந்திர மோடி மைதானத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) குஜராத் டைட்டன்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் மோதுகிறது. இரு அணிகளும் வெற்றியுடன் புதிய சீசனை தொடங்கும் முயற்சியில் ஈடுபடும். 

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் இதுவரை நரேந்திர மோடி மைதானத்தில் மோதியது இல்லை. கடந்த ஆண்டு மகாராஷ்டிராவில் நடைபெற்ற இரண்டு போட்டிகளிலும் குஜராத் அணியே வெற்றிபெற்றது. இதையடுத்து, ஐபிஎல் தொடரில் சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக ஹாட்ரிக் வெற்றியை பெர குஜராத் முயற்சிக்கும். 

இந்தநிலையில், இந்திய அணிக்காக இரண்டு உலகக் கோப்பையை வென்றுகொடுத்த எம்.எஸ். தோனி, கடந்த 2019ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்றார். தொடர்ந்து, கடந்த நான்கு ஆண்டுகளாக ஐபிஎல் தொடரில் மட்டும் விளையாடி வந்த அவர், இந்தாண்டு ஐபிஎல் தொடரில் இருந்தும் ஓய்வுபெற இருப்பதாக கூறப்படுகிறது. 

சென்னை அணிக்காக நான்கு முறை கோப்பை வென்று கொடுத்த எம்.எஸ். தோனி, தான் போகும்போது ஐந்தாவது முறையாகவும் கோப்பையை வெல்லவும் முயற்சி செய்வார். 

இந்த சூழலில் இந்த ஆண்டு எம்.எஸ். தோனி தனிப்பட்ட முறையில் 5 சாதனைகளை படைக்க இருக்கிறார். அது என்ன என்பதை தெளிவாக பார்க்கலாம்.. 

250 ஐபிஎல் சிக்ஸர்கள்:

மிகப்பெரிய சிக்ஸர்களை பதிவு செய்வதில் மிகவும் வல்லமை வாய்ந்தவர். கடந்த 2008 ஐபிஎல் தொடரில் இருந்து விளையாடி வரும் தோனி, இதுவரை 229 சிக்ஸர்களை பறக்கவிட்டுள்ளார். அதேபோல், அதிக சிக்ஸர்கள் அடித்தவர்கள் பட்டியலில் 4வது இடத்திலும் இருக்கிறார். இந்த சீசனில் 21 சிக்ஸர்கள் அடித்தால் அவர் 250 சிக்ஸர்களை பதிவு செய்து புதிய சாதனை படைப்பார். தோனி முன்னதாக ரோகித் சர்மா 240 சிக்ஸர்களுடன் இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருக்கிறார். 

250 ஐபிஎல் போட்டிகள்:

ஐபிஎல் தொடரில் ஆரம்பத்திலிருந்தே விளையாடி வரும் எம்.எஸ். தோனி, இதுவரை 234 போட்டிகளில் விளையாடியுள்ளார். இவருக்கு அடுத்த இடத்தில் தினேஷ் கார்த்திக் 229 போட்டிகளில் விளையாடி இரண்டாம் இடத்தில் இருக்கிறார். இந்த தொடரில் ப்ளே ஆப் உள்பட 16 போட்டிகளில் எம்.எஸ். தோனி விளையாடினால் ஐபிஎல்லில் 250 போட்டிகளில் விளையாடிய முதல் வீரர் என்ற பெருமையை பெறுவார். 

5000 ரன்கள்: 

எம்.எஸ். தோனி ஐபிஎல் தொடரில் 206 இன்னிங்ஸில் விளையாடி 4,978 ரன்கள் எடுத்துள்ளார். வருகின்ற தொடரில் 22 ரன்கள் மட்டும் எடுத்தால் 5000 ரன்களை கடந்த 7 வது வீரர் என்ற பெருமையை பெறுவார். 

எண் வீரர்கள் அணி (ஐபிஎல் 2023) போட்டிகள் ரன்கள் சராசரி ஸ்ட்ரைக் ரேட் சிறந்தது 100/50
1. விராட் கோலி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் 223 6624 36.20 129.15 113 5/44
2. ஷிகர் தவான் பஞ்சாப் கிங்ஸ் 206 6224 35.08 126.35 106* 2/47
3. டேவிட் வார்னர் டெல்லி கேபிடல்ஸ் 162 5881 42.01 140.69 126 4/54
4. ரோஹித் சர்மா மும்பை இந்தியன்ஸ் 227 5879 30.30 129.89 109* 1/40
5. சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் 205 5528 32.52 136.76 100* 1/39
6. ஏபி டி வில்லியர்ஸ் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்  184 5162 39.70 151.68 133* 3/40
7. எம்எஸ் தோனி சென்னை சூப்பர் கிங்ஸ் 234 4978 39.20 135.20 84* 0/24
8. கிறிஸ் கெய்ல் பஞ்சாப் கிங்ஸ்  142 4965 39.72 148.96 175* 6/31
9. ராபின் உத்தப்பா  சென்னை சூப்பர் கிங்ஸ்  205 4952 27.51 130.35 88 0/27