தமிழகத்தில் பாதாளம் நோக்கிச் சென்றுகொண்டிருந்த கொரோனா மீண்டும் வேகமெடுக்கத் தொடங்கியுள்ளது. நேற்று 1,03,798 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 2731 ஆக உள்ளது. சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில் 1,489 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. 


இந்நிலையில், தமிழ்நாட்டில் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அமைச்சர் மா. சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். மேலும், ஞாயிற்றுக்கிழமைகளில் ஊரடங்கு இருப்பதால் சனிக்கிழமைகளில் தடுப்பூசி முகாம் நடைபெறும் என அறிவித்திருக்கிறார். சென்னை சைதாப்பேட்டையில் செய்தியாளர்களை சந்தித்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் இந்த தகவலை உறுதி செய்திருக்கிறார். 






இந்தியாவின் பல மாநிலங்களில் கொரோனா கட்டுப்பாடுகள் தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக டெல்லியில் மூன்றாம் அலை தொடங்கிவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கேற்ப கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. சில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமலில் உள்ளது. தமிழகத்தில் ஜனவரி 1ம் தேதி முதல் ஜனவரி 10 வரையிலான கட்டுப்பாடுகளை அரசு ஏற்கெனவே அறிவித்துள்ளது. கொரோனா தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் தமிழ்நாட்டில் ஞாயிற்றுக்கிழமைகளில் ஊரடங்கு அமலபடுத்துவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. 


மேலும், தியேட்டர்களை பொறுத்தவரை தற்போது 50% இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல் பொங்கல் பண்டிகை வருவதால் அதற்கேற்ப கட்டுப்பாடுகள் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தொடர் ஆலோசனையில் முதலமைச்சர் ஈடுபடுவதால் விரைவில் கட்டுப்பாடுகள் தொடர்பான அறிவிப்பு வெளியாகலாம் என தெரிகிறது.


இந்தியாவின் மற்ற மாநிலங்களைப் பொருத்தவரை கொரோனா கட்டுப்பாடுகள் தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக டெல்லியில் மூன்றாம் அலை தொடங்கிவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கேற்ப கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. சில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமலில் உள்ளது. தமிழகத்தில் ஜனவரி 1ம் தேதி முதல் ஜனவரி 10 வரையிலான கட்டுப்பாடுகளை அரசு ஏற்கெனவே அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க: மாஜி அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கைது: கர்நாடகாவில் பதுங்கிய போது கைதானதாக தகவல்!


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண