தமிழ்நாடு, கர்நாடாகாவின் உள் மாவட்டங்கள், ஒடிசா, உத்தரப்பிரதேசம், பீகார் மாநிலங்களுக்கு மஞ்சள் அலர்ட் விடுத்துள்ளது வானிலை ஆய்வு மையம். மேற்குவங்க மாநிலத்தில் மட்டும் அதிகளவு வெப்ப அலை வீசும் என்பதால் சிவப்பு நிற எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. 


வெப்பநிலையில் இந்தியாவிலேயே ஈரோடு 3ம் இடம்: 






தமிழ்நாட்டில் இன்று வெப்ப அலை வீசும் என மஞ்சள் எச்சரிக்கை விடுத்தது இந்திய வானிலை மையம். அதிகபட்சமாக ஒடிசாவின் புவனேஸ்வர், ஆந்திராவின் கடப்பாவில் 111 டிகிரி வெப்பம் பதிவானது. இந்தியாவிலேயே அதிகபட்ச வெப்பநிலை பதிவான இடங்களில் 3ம் இடம் பிடித்தது ஈரோடு. ஈரோட்டில் அதிகபட்சமாக 109 டிகிரி பார்ன்ஹூட் வெப்பம் பதிவானதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.  


அதிகபட்ச வெப்பநிலை:


தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் பொதுவாக இயல்பை விட 34' செல்சியஸ் மிக அதிகமாக இருந்தது. தமிழக கடலோரப்பகுதிகளில் இயல்பை விட அதிகமாகவும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இயல்பை ஒட்டியும் இருந்தது.


அதிகபட்ச வெப்பநிலை ஈரோட்டில் 42.2° செல்சியஸ். கரூர் பரமத்தியில் 41.3 செல்சியஸ், சேலத்தில் 41.0° செல்சியஸ், வேலூரில் 40.8' செல்சியஸ். திருச்சியில் 40. செல்சியஸ், மதுரை விமானநிலையம் & திருப்பத்தூரில் 40.2° செல்சியஸ் மற்றும் திருத்தணியில் ம செல்சியஸ் பதிவாகியுள்ளது.


தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் 35° 39° செல்சியஸ் பதிவாகியுள்ளது. இதர தமிழக கடலோரப்பகுதிகள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 1539° செல்சியஸ் மற்றும் மலைப் பகுதிகளில் 2430' செல்சியஸ் பதிவாகியுள்ளது.


அடுத்த 6 தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கை:


தென் இந்தியப்பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில், நாற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. 23.04.2024 முதல் 28.04.2024 வரை; தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். வட தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.


அடுத்த 4 தினங்களுக்கான அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு:


23.04.2024 முதல் 26.04.2024 வரை


அதிகபட்ச வெப்பநிலை தமிழக உள் மாவட்டங்களின் ஒருசில இடங்களில் இயல்பை விட 21 செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். ஏனைய தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் பெரிய மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு.


அதிகபட்ச வெப்பநிலை வட தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் ஒருசில இடங்களில் 19-1 செல்சியஸ், இதர தமிழக மாவட்டங்களின் சமவெளி பகுதிகள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 34-38* செல்சியஸ் இருக்கக்கூடும்.


ஈரப்பதம்:


22.04.2024 முதல் 26.04.2024 வரை:


காற்றின் ஈரப்பதம் தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் பிற்பகலில் 30-50% ஆகவும், மற்ற நேரங்களில் 40-75 % ஆகவும் மற்றும் கடலோரப்பகுதிகளில் 50-85 % ஆகவும் இருக்கக்கூடும்.அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது ஓரிரு இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம்.


வெப்ப அலை பற்றிய முன்னெச்சரிக்கை:


23.04.2024: வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும்.