மக்களவை தேர்தல், விக்கிரவாண்டி இடைத்தேர்தல் முடிந்ததை தொடர்ந்து, தமிழ்நாட்டில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. 4.43 சதவிகிதம் உயர்த்தியுள்ளதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பை தமிழ்நாடு மின்சார வாரிய ஒழுங்கு முறை ஆணையம் வெளியிட்டுள்ளது.


எவ்வளவு ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது? 0 முதல் 400 யுனிட் மின்சாரம் வரை பயன்பாட்டளர்களுக்கு யுனிட் ஒன்றுக்கு 4.60 காசு பெற பட்டு வந்தது. தற்போது 4.80 காசாக உயர்த்தப்பட்டுள்ளது. 401 யுனிட் முதல் 500 யுனிட் வரை பயன்படுத்துபவர்களுக்கு ஏற்கனவே 6.15 காசு பெறபட்டு வந்தது. தற்போது 6.45 காசாக உயர்த்தப்பட்டுள்ளது.


501 முதல் 600 யுனிட் வரை பயன்படுத்துபவர்களுக்கு ஏற்கனவே 8.15 காசு வசூலிக்கப்பட்டு வந்தது. தற்போது 8.55 காசாக உயர்த்தபட்டுள்ளது. 601 முதல் 800 யுனிட் மின்சாரம் வரை பயன்படுத்துபவர்களுக்கு ஒரு யுனிட்டுக்கு 9:20 காசு வசூலிக்கப்பட்டு வந்தது. தற்போது 9.65 காசாக உயர்த்தபட்டுள்ளது.


801 முதல் 1000 யுனிட் மின்சாரம் வரை பயன்படுத்துபவர்களுக்கு முன்பு 10:20 காசு வசூலிக்கப்பட்டது. தற்போது 10:70 காசாக வசுலிக்கபட உள்ளது. 1000 யுனிட் மின்சாரம் மேல் பயன்படுத்துபவர்களுக்கு 11.25 காசு வசூலிக்கப்பட்டு வந்தது. இனி 11.80 காசாக வசூலிக்கபடும்.


தமிழ்நாடு மின்சார வாரிய ஒழுங்கு முறை ஆணையம் அறிவிப்பு: வீட்டு பயன்பாடு, கைத்தறி மற்றும் கிராம பஞ்சாயத்துகளில் உள்ள குடிசைகள், அடுக்குமாடி குடியிருப்புகள், வழிபாட்டுதலங்கள், சிறு, குறு தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகள், ஐடி நிறுவனங்களுக்கான மின்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.


கடந்த 2022 ஆண்டு, செப்டம்பர் மாதம், மின் கட்டணமானது 30 சதவீதத்திற்கு மேல் உயர்த்தப்பட்டது. அதோடு, ஆண்டுதோறும் மின் கட்டணம் உயர்த்தப்படும் என அறிவிப்பு வெளியானது. தமிழ்நாடு மின் வாரியம் கடும் நிதி நெருக்கடியில் உள்ள நிலையில், இந்த முடிவு எடுக்கப்பட்டது.


கடந்த 2023ஆம் ஆண்டு, ஜூலை மாதம், 2.18 சதவீதம் மின் கட்டணம் உயர்த்தப்பட்டது. இந்தாண்டு மக்களவை தேர்தல் நடந்ததால் ஜூலை மாதம் மின் கட்டணம் உயர்வு அறிவிக்கவில்லை. மக்களவை தேர்தல், விக்கிரவாண்டி இடைத்தேர்தல் முடிந்ததை தொடர்ந்து, இன்று மின் கட்டண உயர்த்தப்பட்டுள்ளது. மின் கட்டணம் உயர்த்தப்பட்டதற்கு எதிர்க்கட்சி தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.