தமிழ்நாடு அரசின் சார்பில் மாநிலம் முழுவதும் பணிபுரியும் பெண்களுக்காகக் குறைந்த கட்டணத்தில் பிரத்யேக  மகளிர் விடுதிகள் தொடங்கப்பட்டுள்ளன.


தமிழ்நாடு அரசின் 'தமிழ்நாடு பணிபுரியும் மகளிர் விடுதிகள் நிறுவனம்' (TAMIL NADU WORKING WOMEN'S HOSTEL CORPORATION Ltd) சார்பில் இந்த முன்னெடுப்பு தொடங்கப்பட்டுள்ளது. இதன்படி, சென்னை, செங்கல்பட்டு, பெரம்பலூர், சேலம், திருச்சி, திருநெல்வேலி, தஞ்சாவூர், வேலூர், விழுப்புரம் ஆகிய 9 மாவட்டங்களில் 11 மகளிர் விடுதிகள் தொடங்கப்பட்டுள்ளன. தோழி என்ற பெயரில் (Thozhi Hostel) இந்த விடுதிகள் இயங்க உள்ளன. 


என்னென்ன வசதிகள்?


* வாஷிங் மெஷின், ஏ.சி., ஆர்.ஓ. தண்ணீர் வசதி, ஃப்ரிட்ஜ், இலவச வை- ஃபை வசதி, உணவு, தொலைக்காட்சி, 24 மணி நேர பாதுகாப்பு, பார்க்கிங், எனப் என பல வசதிகள் தோழி விடுதிகளில் உள்ளன. 


* அதேபோல அயர்னிங், கெய்சர் வசதியும் இங்கு உண்டு.


* இவை தவிர்த்து பான்ட்ரி, படிக்கும் அறை, க்ரீச் உள்ளிட்ட வசதிகளும் தோழி விடுதிகளில் அமைக்கப்பட்டுள்ளன. 


* இந்த விடுதிகளில் 15 நாட்களுக்குக் குறுகிய காலமாகவும் தங்கிக் கொள்ளலாம். 


* வாடகையோடு, திரும்பப் பெற முடியும் பாதுகாப்புக் கட்டணத்தைச் செலுத்தி, ஒரு நாள் வேண்டுமானாலும் தங்கலாம். 


* இருவர் தங்கும் அறையில், கூடுதல் கட்டணம் செலுத்தி தனியாளாகவும் தங்கிக் கொள்ளலாம்.


* அறைகள், கழிப்பறைகள், உணவு உண்ணும் பகுதிகளை சம்பந்தப்பட்ட விடுதிகளில் பணியாற்றும் ஊழியர்கள் சுத்தப்படுத்திக்கொள்வர். 




என்ன கட்டுப்பாடுகள்?


* பொதுவாக 10 மணிக்குள் பெண்கள் விடுதிக்கு வர வேண்டும். 


* வெவ்வேறு ஷிஃப்டுகளில் பணியாற்றும் பெண்கள் அதற்கேற்ற வகையில், விடுதிக்குத் திரும்பலாம். 


* குடும்பத்தினர் விடுதிக்கு வந்து பெண்களைப் பார்க்கலாம். எனினும் அவர்களுக்குத் தங்கும் வசதி கிடையாது. 
* ஆண் நண்பர்கள் விடுதிக்கு வர அனுமதி இல்லை.  


சென்னையைப் பொறுத்தவரை அடையார், கூடுவாஞ்சேரி ஆகிய இடங்களிலும் விழுப்புரத்திலும் தோழி விடுதிகள் நவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளன. 


கூடுதல் தகவலைப் பெற


தோழி விடுதிகளில் சேர விரும்பும் பெண்கள் 9499988009 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு அல்லது techexe@tnwwhcl.in என்ற இ-மெயில் முகவரிக்கு இமெயில் அனுப்பி, கூடுதல் விவரங்களை அறியலாம். 


முழுமையான விவரங்களுக்கு: http://tnwwhcl.in என்ற இணையதளத்தைக் க்ளிக் செய்து, விடுதிகளின் முகவரி, கட்டணம், முன்பதிவு ஆகிய தகவல்களைப் பெறலாம்.