தமிழ்நாட்டில் புதிதாக ஆயிரம் பேருந்துகள் வாங்குவதற்கு ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
பொதுப் போக்குவரத்து வசதிகளை மேம்படுத்துவதற்காக புதிதாக 1000 பேருந்துகள் வாங்கவும், 500 பேருந்துகளை புதுப்பிக்கவும் ரூ.500 போக்குவரத்துக் கழகத்திற்கு தமிழ்நாடு அரசு நிதி ஒதுக்கியுள்ளது.
சட்டமன்ற கூட்டத்தொடரின்போது, புதிதாக அரசு பேருந்துகளை வாங்க, பேருந்துங்களை சீரமைக்க 500 கோடி ரூபாய் ஒதுக்கப்படும் என்று பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிவிக்கபட்டது. அதிகபட்சமாக 200 எஸ்.இ.டி,.சி. பேருந்துகள் வாங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது., கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி விழுப்புரம், கோவை கோட்டத்திற்கு புதிய பேருந்துகள் வாங்கப்படும் என்று அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதே போன்று ஒட்டு மொத்தமாக 500 பழைய பேருந்துகளை சீரமைக்க சுமார் 76 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அரசுப் போக்குவரத்துக் கழகத்திற்கு தலா 58.5 லட்சம் செலவில் 200 பேருந்துகளும், கும்பகோணம், மதுரை, நெல்லை, கோவை ஆகியவற்றிற்கு ரூ.41.2 லட்சம் செலவில் புதிய பேருந்துகளும் மொத்தம் 446.60 கோடி மதிப்பில் பேருந்துகள் புதிதாக வாங்கப்பட உள்ளன.
சென்னை, மதுரை, கோவை உள்ளிட்ட பகுதிகளில் 500 பேருந்துகள் பழுதுபார்க்க மொத்தம் ரூ.53.40 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே ஆயிரம் பேருந்துகள் நடப்பு நிதியாண்டிற்குள் மாற்றப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஏற்கனவே 15 ஆண்டுகள் பழமையான பேருந்துகள் பயன்படுத்தக் கூடாதுன்னு மத்திய அரசு உத்தவிட்டுள்ளது.
மேலும்,. புதிய பேருந்துகள் வாங்கி ஆறு மாதங்களில் சோதனை ஓட்டம் முடிந்தவுடன் 15 ஆண்டுகள் நிறைவடைந்த பேருந்துகள் பயன்பாடு நிறுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் வாசிக்க.
Fathers Day 2023 Wishes: எந்தன் பொன்வானத்திற்கு அன்புடன்... தந்தையர் தின வாழ்த்துகள் இதோ!