உலக கிரிக்கெட் வரலாற்றில் மிகவும் பழமையான தொடர் ஆஷஸ் தொடர்.  கடந்த 1882 ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த தொடர் கடைசியாக 2021 - 2022 ம் ஆண்டு விளையாடப்பட்டது. இந்த 2022 தொடரில் ஆஸ்திரேலிய அணி  இங்கிலாந்து அணியை 4-0 என்ற கணக்கில் வீழ்த்தி வெற்றிபெற்றது. 


இந்தநிலையில், இரு அணிகளும் மோதும் ஆஷஸ் தொடரானது இன்று (ஜூன் 16) பர்மிங்காமில் உள்ள எட்ஜ்பாஸ்டனில் நடைபெற உள்ளது. 


இந்தநிலையில், இன்று தொடங்கி வருகின்ற ஜூலை 31ம் தேதி வரை நடைபெறவுள்ள ஆஷஸ் தொடரில் வீரர்கள் படைக்க இருக்கும் சாதனைகளை பார்க்கலாம்.. 


டெஸ்டில் 9000 ரன்களை கடக்கவிருக்கும் ஸ்டீவ் ஸ்மித் : 


ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் டெஸ்டில் இதுவரை 8947 ரன்களை குவித்துள்ளார். இன்னும் அவர் 9000 ரன்கள் கடக்க 53 ரன்கள் ரன்கள் மட்டுமே தேவையாக உள்ளது. அதேபோல், ஸ்டீவ் ஸ்மித் டெஸ்டில் 31  சதங்கள் அடித்துள்ளார். முன்னாள் கேப்டன் ஸ்டீவ் வாக் 32 சதங்கள் அடித்துள்ளார். இந்த தொடரில் ஸ்மித் மேலும் 2 சதங்கள் அடித்தால் ஆஸ்திரேலிய நாட்டிற்காக டெஸ்டில் அதிக சதம் அடித்த இரண்டாவது வீரர் என்ற பெருமையை ஸ்மித் பெறுவார். 


இங்கிலாந்து மண்ணில் 2000 ரன்கள் - ஸ்டீவ் ஸ்மித் 


டெஸ்ட் போட்டிகளில் ஸ்டீவ் ஸ்மித் இங்கிலாந்து மண்ணில் இதுவரை 1882 ரன்கள் எடுத்துள்ளார். அவர், இங்கு 2000 ரன்களை கடக்க 118 ரன்கள் மட்டுமே தேவையாக உள்ளது.  இங்கிலாந்து மண்ணில் 7 சதங்கள் மற்றும் 7 அரை சதங்கள் அடித்துள்ளார்.


இங்கிலாந்துக்கு எதிரான அதிக ரன்கள் - ஸ்டீவ் ஸ்மித் 


ஸ்மித் இங்கிலாந்து அணிக்கு எதிராக டெஸ்டில் அதிக ரன்கள் எடுத்த மூன்றாவது வீரர் என்ற பெருமையை படைக்க இருக்கிறார். 



  • டான் பிராட்மேன் (AUS) (5028)

  • ஆலன் பார்டர் (AUS) (3548)

  • கேரி சோபர்ஸ் (WI) (3214)

  • ஸ்டீவ் வாக்  (AUS) (3200)

  • ஸ்டீவ் ஸ்மித்  (AUS) (3044)


சொந்த மண்ணில் 6000 ரன்கள் - ஜோ ரூட்


ஜோ ரூட் இதுவரை டெஸ்ட் போட்டியில் 11004 ரன்கள் எடுத்துள்ளார். அதில், 58 அரைசதங்களும், 29 ரன்களும் அடங்கும். இன்னும் 2 அரைசதங்கள் அடித்தால், இங்கிலாந்து அணிக்காக 60 அரைசதங்கள் அடித்த முதல் வீரர் என்ற பெருமையை படைப்பார். அதேபோல், ரூட் ஒரு சதம் அடித்தால் அலாஸ்டர் குக்கிற்கு பிறகு 30க்கு மேற்பட்ட சதங்களை பதிவு செய்த இரண்டாவது வீரர் ஆவார். 


 இங்கிலாந்து மண்ணில் ரூட் இதுவரை 5680 ரன்கள் எடுத்துள்ளார். 6000 ரன்களைக் கடக்க இன்னும் 320 ரன்கள் தேவையாக உள்ளது. 


700 டெஸ்ட் விக்கெட்கள் -  ஜேம்ஸ் ஆண்டர்சன் 


40 வயதான இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் 658 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். அவர் 700 ரன்களை எடுக்க 15 விக்கெட்கள் மட்டுமே தேவையாக உள்ளது. 


600 டெஸ்ட் விக்கெட்கள் - ஸ்டூவர்ட் பிராட் 


இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர்  ஸ்டூவர்ட் பிராட் டெஸ்டில் இதுவரை 582 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். இவர் 600 விக்கெட்களை எடுக்க 18 ரன்கள் மட்டுமே தேவையாக உள்ளது. 


500 டெஸ்ட் விக்கெட்கள் -நாதன் லயன்  


ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயன் இதுவரை டெஸ்ட் போட்டிகளில் 487 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். இவர் 500 விக்கெட்களை வீழ்த்த இன்னும் 13 விக்கெட்களே தேவையாக உள்ளது. 


டெஸ்டில் 1000 பவுண்டரிகள் - ஸ்மித், வார்னர்


டேவிட் வார்னர் டெஸ்டில் 970 பவுண்டரிகளை விளாசியுள்ளார். 1000 என்ற மைல்கல்லை எட்ட அவருக்கு இன்னும் 30 பவுண்டரிகள் தேவை. இதற்கிடையில், ஸ்மித் 983 பவுண்டரிகளை அடித்து 17 பவுண்டரிகள் தேவையாக உள்ளது.