Flood Relief: வெள்ள நிவாரணம் தொகை ரூ.6,000 யார் யாருக்கு கிடைக்கும் என்ற அறிவிப்பை தமிழ்நாடு  அரசு வெளியிட்டிருக்கிறது.


மிக்ஜாம் புயல்:


சென்னை மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களில் காலநிலை மாற்றத்தால் அண்மையில் வரலாறு காணாத கன மழை கொட்டித் தீர்த்தது. அதிகபட்சமாகப் பெருங்குடியில் 45 செ.மீ. மழை பொழிந்தது. டிசம்பர் 3 மற்றும் 4ஆம் தேதிகளில் பெய்து தீர்த்த மழையால், லட்சக்கணக்கான மக்கள் கடும் அவதிக்கு ஆளாகினர்.


வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்தும், தண்ணீர், மின்சாரம் இல்லாமலும் மக்கள் அவதிப்பட்டனர். குழந்தைகளும் கர்ப்பிணிப் பெண்களும் பால் கிடைக்காமல் அவதிப்பட்டனர். ஏராளமான வாகனங்கள் நீரில் மூழ்கின. அடித்தும் செல்லப்பட்டன.  வெள்ள நீருடன், கழிவு நீரும் கலந்து வீட்டுக்குள் இருந்த பொருட்கள் நாசமான சம்பவமும் நடந்தது. 20-க்கும் மேற்பட்டோர் மிக்ஜாம் புயலால் பலியாகினர்.


நிவாரண தொகை அறிவிப்பு:


இந்த நிலையில், தமிழக அரசு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணத் தொகையை அறிவித்துள்ளது. மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண நிதியாக ரூ.6,000 வழங்கப்படும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதேபோல, புயல், வெள்ளத்தினால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு, இழப்பீட்டுத் தொகையாக ரூ.5,00,000 வழங்கப்பட உள்ளது. அதேபோல, சேதமடைந்த குடிசைகளுக்கு  ரூ.8,000 வழங்கப்பட உள்ளது. இந்த நிவாரணத் தொகையை, பாதிக்கப்பட்டவர்கள் குடியிருக்கும் பகுதிகளில் உள்ள நியாய விலைக் கடைகளின் மூலம் ரொக்கமாக பெற்றுக் கொள்ளலாம் என்று அரசு தெரிவித்து உள்ளது.


ரூ.6,000 யார் யாருக்கு கிடைக்கும்? 


இதனால் ரேஷன் அட்டை வைத்திருப்போர் மட்டுமே நிவாரணத் தொகை பெறத் தகுதியானவர்களா என்று கேள்வி எழுந்துள்ளது. இதற்கு தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்துள்ளது.  தனி நபர் குடும்ப அடைக்கும், புதிதாக ரேசன் அட்டைக்கு விண்ணப்பித்தவர்களுக்கும் நிவாரண தொகை கிடைக்கும் என்று தமிழ்நாடு  அரசு தெரிவித்துள்ளது.


சென்னை மாநகராட்சியின் மக்கள் தொகையில் சுமார் 70 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் வாடகை வீட்டில் வசிப்பவர்களே. இதனால் 1.11 கோடி மக்களுக்கும் மேல் உள்ளவர்கள் வாடகை வீடுகளில்தான் வசிக்கின்றனர். இவர்களால் நிவாரணத் தொகையைப் பெற முடியுமா என்று கேள்விகள் எழுந்துள்ளன. இது குறித்து தமிழக அரசு சார்பிலும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுகுறித்து விரைவில் முடிவெடுக்கப்பட்டு, அறிவிப்பு வெளியாகும் என்று அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 




மேலும் படிக்க


Michaung cyclone: சூறையாடிய மிக்ஜாம் புயல்! பாதிக்கப்பட்ட விளை நிலங்களுக்கு நிவாரணம் எவ்வளவு? முழு விவரம் உள்ளே


கட்டுமரங்கள் முதல் இயந்திர படகுகள் வரை! மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு நிவாரணம் எவ்ளோனு தெரிஞ்சுக்கோங்க!