ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதத்தின் முதல் வாரத்தில் சட்டபேரவையில் முதல் கூட்டத்தொடர் நடத்துவது மரபாக உள்ளது. அந்த வகையில் நடப்பாண்டுக்கான கூட்டத்தொடர் ஆளுநர் ஆர்.என்.ரவியின் உரையுடன் இன்று தொடங்கியது. அனைவருக்கும் வணக்கம் என கூறி சட்டப்பேரவையில் தமிழில் தனது உரையை தொடங்கினார் ஆளுநர் ரவி. அதில், “சட்டப்பேரவையில் எனது உரையை ஆற்றுவதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். அனைவருக்கும் புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துகள்.வரப்புயர நீர் உயரும், நீர் உயர நெல் உயரும்.” என பேசினார்.
அப்போது, ஆளுநர் உரையில் விவேகானந்தர் பெயரை தமிழ்நாடு அரசு குறிப்பிடாத நிலையில், ஆளுநர் ஆர்.என்.ரவி விவேகானந்தர் பெயரை தன்னிச்சையாக சேர்த்து படித்துக்கொண்டிருக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல், 'திராவிட மாடல்' என்ற வார்த்தையையும் தவிர்த்துவிட்டதாக கூறப்படுகிறது
ஆளுநர் உரையில் இடம்பெற்றிருந்த திராவிட மாடல் என்ற வார்த்தையை தவிர்த்து ஆளுநர் ரவி உரையை வாசித்தார். அப்போது திராவிட மாடல் என்ற வார்த்தையை உரையின்போது ஆளுநர் ரவி தவிர்த்துள்ளார். ஆளுநருக்காக அரசு தயாரித்த உரையில் திராவிட மாடல் என்ற வார்த்தை இடம்பெற்றுள்ளது.
வெளியே வந்த திமுக கூட்டணி கட்சியினர் செய்தியாளர்கள் முன்பு ஆளுநருக்கு எதிராக முழுக்கமிட்டனர். அதில், ஆர்.எஸ்.எஸ் கொள்கையை, பிஜேபி கொள்கையை தமிழ்நாட்டில் திணிக்காதே! எங்கள் நாடு, எங்கள் நாடு.. தமிழ்நாடு எங்கள் நாடு! பிடிக்கவில்லை என்றால் வெளியேறு வெளியேறு.. ஆளுநரே வெளியேறு புறக்கணிக்கிறோம் உங்கள் வருகையை புறக்கணிக்கிறோம் “ என்று முழுக்கமிட்டனர்.
தொடர்ந்து காங்கிரஸ் எம்.எல்.ஏ செல்வப் பெருந்தகை பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “ தொடர்ந்து தமிழ்நாடு ஆளுநர் ரவி அவர்கள், தமிழகத்திற்கு எதிராகவும், மக்களுக்கு எதிராகவும், அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிராகவும்தான் அவர் செயல்பட்டுகொண்டு இருக்கிறார். அரசியல் அமைப்பு சட்டத்தை மதிப்பது கிடையாது.
அரசியலமைப்பு சட்டத்திற்கு மேலானவராக தன்னை கற்பனையாக கருதுகிறார். தொடர்ந்து அவருடைய போக்கு, பாதையெல்லாம் அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராகதான் நடைபெற்றுகொண்டு இருக்கிறது. இந்திய வரலாற்றில், இந்திய ஆளுநர் வரலாற்றில், குறிப்பாக தமிழக ஆளுநர் வரலாற்றில் இதுவரை இப்படிப்பட்ட ஒரு மோசமான, அரசியல் அமைப்புக்கு எதிராக செயல்படுகின்ற ஆளுநரை தமிழ்நாடு பார்த்ததில்லை.
ஆளுநர் உரை என்பது என்ன? இந்த வருடம் தமிழ்நாட்டிற்கு தேவையான நலத்திட்டங்கள், தமிழ்நாட்டின் செயல்திட்டங்கள் போன்றவற்றை தொகுத்து மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு ஆளுநரை படிக்க சொல்லுகிறது. இதுதான் ஆளுநர் வேலை. இதுதான் மரபு. அதைதான் படிக்க வேண்டும்.
இதை எல்லாம் செய்யாமல் இவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் போன்று, அரசு எழுதி கொடுக்கின்ற கருத்தை, தொகுப்பை படிக்காமல் தன்னுடைய இஷ்டத்திற்கு படிக்கிறார் என்றால் இது வன்மையாக கண்டிக்கிற செயல். ” என்று தெரிவித்தார்.