பொதுப்பணித்துறை அமைச்சர் ஏ.வ..வேலு மற்றும் அமைச்சர் செந்தில்பாலாஜி  கரூர் திருவள்ளுவர் மைதான
திடலில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் ஓயா உழைப்பின் ஓராண்டு - கடைக்கோடி
தமிழரின் கனவுகளைத் தாங்கி  என்ற தலைப்பில் அமைக்கப்பட்டிருந்த தமிழ்நாடு அரசின் சாதனைகள் மற்றும் திட்டங்கள் குறித்த புகைப்படக்கண்காட்சியினை தொடங்கி வைத்தார்கள். அதனைத் தொடர்ந்து


 




 


3-ஆம் நாள் நிகழ்ச்சியாக. 


பள்ளிக்கல்வித்துறை சார்பில் காசிபாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர்களின்
நாட்டுப்புறப் பாடல்கள் நிகழ்ச்சியும், கூடலூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவிகளின் கும்மி பாட்டு, தாதம்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிமாணவிகளின் கிராமிய பாடல்கள் நடனம்,


 


 




 


தேவராட்டம், தென்னிலை அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களின் வில்லுப்பாட்டு, எம்.
தொட்டம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவிகளின் குழு நடனம் நிகழ்ச்சி புன்னம்சத்திரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவிகளின் கலம்பகம் நாட்டியம் நடைபெற்றது.


 




இந்நிகழ்ச்சியில், ஒருங்கிணைப்பாளர்கள் உதவி திட்ட அலுவலர் சக்திவேல், க.பரமத்தி வட்டார கல்வி சித்ரா, காப்பர் பத்தி வட்டாரக்கலை ஒருங்கிணைப்பாளர் நிவேதா மற்றும் செய்தி மக்கள் தொடர்புத்துறை அலுவலர் கலந்து கொண்டார்கள்.