மத்திய சுற்றுலாத்துறையால் வெளியிடப்பட்டுள்ள 2021ஆம் ஆண்டு புள்ளிவிவரத்தின்படி கடந்த 2020ஆம் ஆண்டில் அதிக சுற்றுலா பயணிகளை ஈர்த்து நாட்டிலேயே முன்னணி சுற்றுலா மாநிலமாக தமிழ்நாடு உருவெடுத்துள்ளது. 2020ஆம் ஆண்டின் மொத்த சுற்றுலா பயணிகள் வருகைகள் விகிதத்தில் தமிழ்நாடு 22.9% பங்கை கொண்டுள்ளது. மேலும் அதே ஆண்டில் தமிழகத்திற்கு ஒரு கோடியே 40 லட்சத்திற்கும் அதிமான உள்நாட்டு சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளனர்.


வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை ஈர்ப்பதிலும் தமிழ்நாடு, மகாராஷ்டிராவுக்கு அடுத்த இடத்தில் உள்ளது. சுமார் 16 லட்சம் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை ஈர்த்து மகாராஷ்டிரா முதலிடத்திலும் அடுத்த 12 லட்சம் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை ஈர்த்து தமிழ்நாடு இரண்டாவது இடத்திலும் உள்ளது.


சென்னை விமான நிலையத்தை விரும்பும் வெளிநாட்டவர்கள் 


 



இந்தியாவுக்கு வரும் மொத்த சுற்றுலாபயணிகளில் அமெரிக்கா, லண்டன், வங்கதேசம் ஆகிய நாடுகளை சேர்ந்த சுற்றுலாபயணிகள் 45 சதவீத பங்களிப்பை அளித்துள்ளனர். 6.6% வெளிநாட்டு சுற்றுலாபயணிகளுக்கு சென்னை சர்வதேச விமான நிலையம் நுழைவாயிலாக உள்ளது புள்ளி விவரங்களில் தெரியவந்துள்ளது. இலங்கையில் இருந்து வரும் 52% பேரும், சிங்கப்பூரில் இருந்து 22.5% பேரும், மலேசியாவில் இருந்து 20.4% பேரும், பிரான்சில் இருந்து 18.8% பேரும், தென் கொரியாவில் இருந்து 16.8% பேரும் சென்னை வழியாக இந்தியாவுக்கு வருவதை விருப்பமாக கொண்டுள்ளனர். 


வலுவான சுற்றுலா கட்டமைப்பு கொண்ட தமிழகம் 


தமிழகத்தில் உள்ள தரமான ஹோட்டல்கள் மற்றும் அறைகளின் உட்கட்டைமைப்பு  யூனோஸ்கோ அறிவித்துள்ள உலக பாரம்பரிய சின்னங்களில் ஐந்தில் ஒன்றாக விளங்கும் மாமல்லபுரம் உள்நாட்டு சுற்றுலா பயணிகளை ஈர்ப்பதில் இரண்டாம் இடத்திலும், வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை ஈர்ப்பத்தில் ஐந்தாவது இடத்திலும் உள்ளது.  இந்திய சுற்றுலா அமைச்சகம் மற்றும் இந்திய தூதரகங்கள் எடுத்த முயற்சி காரணமாக வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கொரோனா பொதுமுடக்கத்திற்கு பிறகு இந்தியாவில் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க ஆஸ்திரேலியா, கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், மலேசியா, மியான்மர், ஓமன், போர்ச்சுகல், ரஷ்யா, சிங்கப்பூர், தென்கொரியா, ஸ்பெயின், இலங்கை, தென்கொரியா, தாய்லாந்து, நெதர்லாந்து, ஐக்கிய ராஜ்ஜியம், அமெரிக்கா உள்ளிட்ட 20 நாடுகளில் சுற்றுலா அதிகாரிகளை நியமித்துள்ளது. 




சாகச சுற்றுலாவை மேம்படுத்த திட்டம் 


இந்திய அரசின் முயற்சி உடன் தமிழ்நாடு சுற்றுலாதுறை சர்வதேச அளவில் சுற்றுலா பயணிகளை கவந்துள்ளது. சுற்றுலாத்துறையை மேம்படுத்த தமிழக அரசு பல்வேறு முக்கிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கொல்லிமலை, ஜவ்வாதுமலை, ஏலகிரி ஆகிய பெரிதும் அறியப்படாத பகுதிகளில் சாகச சுற்றுலா மற்றும் இயற்கை வாழிடங்களாக மேம்படுத்துவதன் மூலம் சுற்றுலா பயணிகளுக்கு நல்ல அனுபவத்தை ஏற்படுத்துவதன் மூலம் அப்பகுதிகளை மேம்படுத்த தமிழ்நாடு சுற்றுலாத்துறை திட்டமிட்டுள்ளது.