Kallakurichi Hooch Tragedy : ”கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் எதிரொலி” மாவட்ட போலீஸ் எஸ்.பிக்களுக்கு பறந்த ஆர்டர்..!

”கள்ளச்சாரய விவகாரத்தில் தொடர்புடையாவர்கள் யாராக இருந்தாலும் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் விடமாட்டோம் என மூத்த அமைச்சர் ஏ.வ.வேலு தெரிவித்த நிலையில், பல முக்கிய புள்ளிகள் சிக்க வாய்ப்பு”

Continues below advertisement

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து இந்த செய்தியை எழுதும் வரை 35 பேர் உயிரிழந்துள்ள நிலையில், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்ட போலீஸ் எஸ்.பிக்களுக்கு அதிரடி உத்தரவு பறந்துள்ளது.

Continues below advertisement

இரும்பு கரம் கொண்டு அடக்கப்படும் - முதல்வர்

கள்ளச்சாராயம் விற்பவர்கள், காய்ச்சுபவர்கள் இரும்பு கரம் கொண்டு ஒடுக்கப்படுவார்கள் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருக்கும் நிலையில், ஒவ்வொரு மாவட்டத்திலும் சட்டவிரோதமாக சாராயம் விற்கப்படுகிறதா என்பது குறித்து அதிரடி சோதனை செய்ய அனைத்து மாவட்ட எஸ்.பிக்கள் / மாநகர கமிஷனர்கள் என அனைத்து போலீசாருக்கும் தமிழக உள்துறையில் இருந்து ஆர்டர் பறந்துள்ளது.

களத்தில் நேரடியாக இறங்கிய டிஜிபி

அதே நேரத்தில் தமிழ்நாடு டிஜிபி சங்கர் ஜிவாலும் அனைத்து மாவட்ட போலீசார், ஆணையர்களுக்கு இந்த உத்தரவை உடனடியாக அமல்படுத்தி, சட்டவிரோதமாக சாராயம் விற்பவர்கள், மது விற்பவர்கள் என ஒருவர் கூட விடாமல் பிடித்து, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார். இன்று காலை டிஜிபி தலைமையில் உயர் அதிகாரிகள், எஸ்.பிகளின் கூட்டம் காணொளியில் நடந்துள்ளது அதில்தான் டிஜிபி இந்த அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார்.

அதிரடி சோதனையை தொடங்கிய புதுகை எஸ்.பி.

டிஜிபியின் உத்தரவை அடுத்து மாவட்டம் முழுவதும் கள்ளச்சாராயம் உள்ளிட்ட சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் நபர்கள் குறித்து அதிரடி சோதனை நடத்த தன்னுடைய மாவட்ட காவல்துறைக்கு உடனடியாக உத்தரவு பிறப்பித்து கண்காணித்து வருகிறார் புதுக்கோட்டை எஸ்.பி. வந்திதா பாண்டே. மற்ற மாவட்ட எஸ்.பிக்களும் இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

திருவாரூர் மாவட்டத்தில் 24 பேர் கைது

திருவாரூர் மாவட்டத்தில் நடத்தப்பட்ட அதிரடி சோதனையில் சட்டவிரோதமாக கள்ளச்சந்தையில் மது விற்பனை செய்த 24 பேரை 24 மணி நேரத்தில் கைது செய்து அதிரடி காட்டியிருக்கிறது திருவாரூர் மாவாட்ட காவல்துறை

கள்ளக்குறிச்சியில் களம் இறங்கும் சிபிசிஐடி

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவத்தில் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே இருக்கும் நிலையில், இந்த விவகாரம் குறித்து விசாரிக்க வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றிய தமிழ்நாடு அரசு. இந்நிலையில், அங்கு சிபிசிஐடி ஏடிஎஸ்பி கோமதி தலைமையிலான போலீசார் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர்.

யார் தவறு செய்திருந்தாலும், அவர் எந்த கட்சியை சேர்தவராக, எவ்வளவு பலம் வாய்ந்தவராக இருந்தாலும் திமுக அரசு விடாது என அமைச்சர் ஏ.வே.வேலு கூறியிருந்த நிலையில், சிபிசிஐடி விசாரனையில் பல முக்கிய பிரமுகர்கள் சிக்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Continues below advertisement
Sponsored Links by Taboola