1. மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே டி.குன்னத்துாரில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு அம்மா சேரிடபிள் டிரஸ்ட் சார்பில் அப்போதைய வருவாய்துறை அமைச்சர் ஆ.பி.உதயகுமார் கோயில் கட்டினார். இக்கோயிலின் கும்பாபிஷேகம் அப்போதைய முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்றது.
2. மதுரையைச் சேர்ந்த தடகள வீராங்கனை ரேவதி வீரமணி, டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் கலப்புத் தொடர் ஓட்டம் பிரிவில் இந்தியா சார்பாகக் கலந்துகொண்டது மதுரை மக்களை மகிழ்ச்சியடைய செய்தது. ஒலிம்பிக் போட்டியில் பரிசுபெறவில்லை என்றாலும், அவர் போட்டியில் கலந்துகொண்டதே பலரையும் நெகிழ்ச்சியடைய செய்தது.
3. மதுரை 292-வது ஆதீனம் அருணகிரிநாதர். தனது 77ஆவது வயதில் சுவாசக்கோளாறு ஏற்பட்டு மதுரை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து அவரின் உடல்நலம் பாதிக்கப்பட்டதால் தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார். ஆகஸ்ட் 13-ம் தேதி இரவு சுமார் 9:15 மணிக்கு உயிரிழந்தாக மருத்துவ நிர்வாகம் அறிக்கை வெளியிட்டது. மதுரை ஆதீனத்தின் மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்களும் இரங்கல் தெரிவித்தனர்.
4. முன்னாள் எம்.எல்.ஏ நன்மாறன், பென்சன் தொகை ரூ.20 ஆயிரத்தில் பாதியைக் கட்சிக்குக் கொடுத்துவிட்டு, மீதியில் வாழ்க்கை நடத்திவந்தவர். கக்கன், காமராஜரை போல் எளிமையான வாழ்க்கை வாழ்ந்த நன்மாறன் மூச்சு திணறல் காரணமாக அரசு ராஜாஜி மருந்துவமனை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட நிலையில் சிகிச்சை பலனான்றி காலமானார். அவருக்கு வயது 74 இவர் 2001 முதல் 2011 வரை இரண்டு முறை மதுரை கிழக்கு தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக இருந்து மக்கள் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
5. மதுரையிலிருந்து செட்டிக்குளம் வரையில் தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் 7.5 கி.மீட்டர் நீளத்தில் 544 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நான்குவழி மேம்பாலம் அமைக்கும் பணிகள் கடந்த மூன்று வருடங்களாக நடைபெற்றுவருகிறது. இந்நிலையில் ஐய்யர்பங்களா அருகே நாராயணபுரம் பேங்க் காலனி பகுதியில் மேம்பாலத்தை இணைக்கும் போது ஹைட்ராலிக் இயந்திரம் பழுது காரணமாக பாலத்தின் கீழே விழுந்து விபத்து ஏற்பட்டது. இதில் அங்கு பணியில் இருந்த உத்தரபிரதேசம் மாநிலத்தை சேர்ந்த ஆகாஷ் சிங் என்ற தொழிலாளர் சம்பவ இடத்திலயே உயிரிழந்தார். இதனை பொதுப்பணத்துறை அமைச்சர் உள்ளிட்ட பல்வேறு துறை அமைச்சர்களும் பார்வையிட்டனர்.
6. காந்தி ஜெயந்தியை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டது. அனைவராலும் பரபரப்பாகப் பேசப்பட்டது. தமிழ்நாடு மாநில வரலாற்றிலேயே முதலமைச்சர் ஒருவர் கிராமசபை கூட்டத்தில் நேரடியாக கலந்துகொண்டு மக்களிடையே உரையாற்றி கிராம தீர்மானங்களை விவாதிப்பது இதுவே முதல் முறையாகும்.
7.காந்தியடிகள் மதுரைக்கு வந்தபோது வயலில் வேலை செய்து கொண்டிருந்த விவசாயிகளின் உடைகளால் ஈர்க்கப்பட்டார். கோட்டு சூட்டு ஆடையில் இருந்து எளிமையான வேட்டி உடைக்கு காந்தி மாறினார். அவரை அரை ஆடை ஏற்ற தினமாக செப்டம்பர் 22-ம் தேதி அனுசரிக்கப்படுகிறது. காந்தியடிகள் அரை ஆடை ஏற்றதற்கான நூற்றாண்டு அனுசரிக்கப்பட உள்ள நிலையில் மதுரையில் உள்ள காந்தி அருங்காட்சியகத்திற்கு மகாத்மா காந்தியின் பேத்தி தாரா காந்தி பட்டாச்சார்யா இந்தாண்டு மதுரை காந்தி மியூசியத்திற்கு வருகை தந்தார்.
8. மதுரையில் அம்மா உணவக பெயர் பலகையில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா படத்துடன் சேர்த்து கருணாநிதியின் படமும் இடம்பெற்றது. இந்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்திய பின்பு நீக்கப்பட்டது.
9. முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ அ.தி.மு.க. தலைவர்களை விமர்சனம் செய்வது போன்றும், சசிகலாவை ஆதரித்து பேசுவது போன்றும் சமூக வலை தளங்களில் ஆடியோ பதிவு வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை செல்லூர் ராஜூ எம்.எல்.ஏ. மறுத்திருந்தார். தொடர்ந்து வழக்கு தொடர உள்ளதாகவும் தெரிவித்தார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
10. இரக்கமே இல்லாத 'இதயம் டிரஸ்ட்' மதுரையில் குழந்தைகளை கடத்தி விற்பனை செய்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மனநலம் குன்றிய இளம் பெண்ணின், ஆண் குழந்தையை ஐந்து லட்ச ரூபாய்க்கு விற்பனை செய்துவிட்டு, குழந்தை கொரோனாவால் இறந்ததாக கூறி சினிமா லெவலுக்கு நாடகமாடியது அம்பலமானது.
11. மதுரை மாநகரின் மைய பகுதியில் 1921 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது மத்திய பேருந்து நிலையம். மீனாட்சி பேருந்து நிலையம், சென்ட்ரல் பேருந்து நிலையம் என்ற பெயர்களில் அழைக்கப்பட்டு வந்த இது 1971 முதல் பெரியார் பேருந்து நிலையமாக மாற்றப்பட்டது. பின்னர், போக்குவரத்து நெரிசலை குறைக்கும் நோக்கில் மாட்டுத்தாவணி மற்றும் ஆரப்பாளையத்தில் தனித்தனியாக புறநகர் பேருந்து நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டன. இந்நிலையில் பெரியார் பேருந்து நிலையத்தில் பேருந்து நிறுத்தம் செய்யும் பகுதியினை காணொளி காட்சி வாயிலாக மக்கள் பயன்பாட்டிற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
12. மதுரை மற்றும் சுற்றுவட்டாரங்களில் மல்லிகைப் பூ விளைச்சல் அதிகமாக இருக்கும். இதனால் மதுரை மல்லிக்கு தனி மவுசு உண்டு. இந்நிலையில் 2021-ல் ஆண்டில் டிசம்பர் 12-ம் தேதி மல்லிகை பூவின் விலை கிலோ 4ஆயிரம் விலையை எட்டியது. இந்தாண்டின் உச்சபச்ச விலை இது தான் என பூ வியாபாரிகள் தெரிவித்தனர்.
இதை படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Madurai Taste | பர்மா இடியாப்பம்.. அவித்த காய்கறி குருமா.. இறைச்சி க்ரேவி.. மதுரையில் இப்படி ஒரு Foodie சொர்க்கம்