தமிழ்நாட்டில் இன்று (அக்டோபர்ர் 13) கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 296 ஆக குறைந்துள்ளது.



இன்றைய பாதிப்பு:


தமிழ்நாட்டில் இன்று புதிதாக 296 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 4,289 ஆக உள்ளது. இதுவரை தமிழ்நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 35லட்சத்திற்கு மேல் உள்ளது.


மாவட்டங்கள் நிலவரம்:


அதிகபட்சமாக சென்னை மாவட்டத்தில் 74 பேரும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 20 பேரும் கொரோனா தொற்றால் இன்று பாதிக்கப்பட்டுள்ளனர்.






உயிரிழப்பு:


தமிழ்நாட்டில் இன்று யாரும் கொரோனா தொற்றால் உயிரிழக்கவில்லை என மக்கள் நல்வாழ்வுத் துறை தெரிவித்துள்ளது. இதுவரை தமிழ்நாட்டில் கொரோனா தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 38 ஆயிரத்து 048ஆக உள்ளது.


கொரோனா தொற்றானது, தமிழ்நாட்டில் குறையத் தொடங்கியுள்ளது. ஆனாலும், மக்கள் கவனமாக இருக்க வேண்டும். ஏனென்றால், கொரோனா தொற்று முழுமையாக ஒழியவில்லை. ஆகையால் பொது இடங்களில் செல்லும்போது முகக் கவசம் அணிந்து கொள்ளுங்கள். அரசு கூறும் கொரோனா தொற்று வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றுங்கள்.


உலகம் முழுவதும் பல நாடுகளில் மாடர்னா, ஃபைசர் உள்ளிட்ட பல்வேறு வகையான தடுப்பூசிகள் போடப்படுகின்றன. இந்தியாவில் கோவாக்சின், கோவிஷீல்டு,ஸ்புட்னிக் உள்ளிட்ட பல்வேறு வகையான தடுப்பூசிகள் போடப்படுகின்றன.


Also Read: ஆபத்தை உணராமல் படியில் பயணம் செய்யும் மாணவர்கள்; கூடுதல் பேருந்துகள் இயக்க கோரிக்கை







ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண