கரூர் அருகே பள்ளி மாணவர்கள் அரசு பேருந்தில் படிக்கட்டில் தொங்கியபடி பயணம், ஆபத்தை உணராமல் படியில் பயணம் செய்த மாணவர்கள். கரூர் மாவட்டம், வெள்ளியணையில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் நூற்றுக்கணக்கான மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர்.




இப்பள்ளியில் அம்மன் நகர், மணவாடி, பிச்சம்பட்டி, ஜல்லிப்பட்டி, வெங்கக்கல்பட்டி என பல்வேறு கிராமப்புறங்களில் இருந்து இந்த அரசு பள்ளியில் மாணவ, மாணவிகள் பேருந்தில் பயணம் செய்து வெள்ளியணை அரசு பள்ளியில் பயின்று வருகின்றனர்.




இந்த நிலையில் பள்ளி முடித்துவிட்டு மாணவர்கள் பேருந்துக்காக காத்திருந்த நிலையில், கரூரில் இருந்து வந்த அரசு நகர பேருந்து, வெள்ளியணை பேருந்து நிருத்தத்திற்கு வந்த போது மாணவர்கள் முண்டியடித்து ஏறினார்கள். மாணவர்களுக்கு பேருந்திற்கு உள்ளே செல்ல வழி இல்லாததால் மாணவர்கள் படிவில் தொங்கி செல்லும் நிலை ஏற்பட்டது.




அரசு பேருந்து ஓட்டுநர் பேருந்து இயக்க தொடங்கியதும், மாணவர்கள் ஓடிச் சென்று படியில் தொங்கியவாறு சென்றனர். ஆபத்தை உணராமல் பேருந்தில் பயணிக்கும் மாணவ, மாணவியர்களின் நலன் கருதி காலை மற்றும் மாலை நேரங்களில் கூடுதல் அரசு பேருந்து இயக்க வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண