இன்றைய பாதிப்பு:

தமிழ்நாட்டில் இன்று புதிதாக 2,385 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 12, 158 ஆக உள்ளது. இதுவரை தமிழ்நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 34 லட்சத்து 75 ஆயிரத்துக்கு மேல் உள்ளது.

மாவட்டங்கள் நிலவரம்:

அதிகபட்சமாக சென்னை மாவட்டத்தில் 1,025பேரும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 369 பேரும் கொரோனா தொற்றால் இன்று பாதிக்கப்பட்டுள்ளனர். 

உயிரிழப்பு:

தமிழ்நாட்டில் இன்று யாரும் கொரோனா தொற்றால் உயிரிழக்கவில்லை என மக்கள் நல்வாழ்வுத் துறை தெரிவித்துள்ளது. இதுவரை தமிழ்நாட்டில் கொரோனா தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 38 ஆயிரத்து 026ஆக உள்ளது.

பரிசோதனை:

தமிழ்நாட்டில் இன்று மட்டும் 32 ஆயிரத்து 960 பேருக்கு கொரோனா பரிசோதனை மாதிரிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதுவரை தமிழ்நாட்டில் 6.70கோடிக்கு மேல் கொரோனா பரிசோதனை மாதிரிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை தெரிவித்துள்ளது.

 

மேலும் செய்திகளை காண, 

ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூடிபில் வீடியோக்களை காண