தமிழகத்தில் இன்று கொரோனாவால் 28 ஆயிரத்து 864 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் சுமார் ஒரு வாரத்திற்கு பிறகு கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 30 ஆயிரத்திற்கு கீழ் குறைந்துள்ளது. சென்னையில் மட்டும் 2 ஆயிரத்து 689 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையைத் தவிர பிற மாவட்டங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 26 ஆயிரத்து 175-ஆக பதிவாகி உள்ளது. இதனால், மாநிலம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை 20 லட்சத்து 68 ஆயிரத்து 580-ஆக பதிவாகி உள்ளது. சென்னையில் இன்றைய நிலவரப்படி, கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 35 ஆயிரத்து 423 ஆக பதிவாகி உள்ளது.
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் ஆண்கள் மட்டும் 12 லட்சத்து 20 ஆயிரத்து 401 நபர்கள் ஆவர். பெண்கள் 8 லட்சத்து 48 ஆயிரத்து 141 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மூன்றாம் பாலினத்தவர்கள் 38 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இன்று தொற்று உறுதியானவர்களில் ஆண்கள் மட்டும் 16 ஆயிரத்து 238 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பெண்கள் 12 ஆயிரத்து 626 நபர்கள் பாதிக்கப்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களில் இன்று மட்டும் 32 ஆயிரத்து 982 நபர்கள் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால், தமிழ்நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணம் அடைந்து வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 17 லட்சத்து 39 ஆயிரத்து 280 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 493 பேர் உயிரிழந்தனர். கடந்த வாரம் கொரோனாவால் உயிரிழப்போர் எண்ணிக்கை 404 என்ற அளவில் பதிவாகிய நிலையில், இன்று தமிழகத்தில் முன் எப்போதும் இல்லாத வகையில் முதன்முறையாக 493 நபர்கள் ஒரே நாளில் உயிரிழந்துள்ளனர்.
இன்று உயிரிழந்தவர்களில் மட்டும் 199 பேர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்கள். 294 நபர்கள் அரசுமருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்கள். இதனால், மாநிலம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 23 ஆயிரத்து 754 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பால் இன்று ஒரே நாளில் மட்டும் 93 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், சென்னையில் மட்டும் கொரோனாவால் இதுவரை 7 ஆயிரத்து 8 நபர்கள் உயிரிழந்துள்ளனர். கொரோனாவால் இன்று உயிரிழந்தவர்களில் 129 பேர் எந்தவித பாதிப்பும் இல்லாதவர்கள்.
தமிழகத்தில் கடந்த வாரம் 36 ஆயிரம் என்று பதிவாகி வந்த தினசரி கொரோனா பாதிப்பு இன்று 28 ஆயிரம் என்ற அளவில் குறைந்துள்ளது. இது பொதுமக்களுக்கு ஆறுதல் அளிக்கும் விதமாக இருந்தாலும், உயிரிழப்பு தொடர்ந்து அதிகரித்து வருவது பொதுமக்களுக்கு அச்சம் அளித்துவருகிறது.
மேலும் படிக்க : https://tamil.abplive.com/news/tamil-nadu/tamil-nadu-chief-minister-mk-stalin-visited-the-covid-ward-at-esi-hospital-with-ppe-kit-4521/amp