முதலமைச்சர் மு.க ஸ்டாலின்,  கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முழு உடல் கவசத்தை அணிந்து கொண்டு  கொரோனா வார்டை ஆய்வு செய்தார். சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளிடம் நேரடியாக நலம் விசாரிக்கும் வீடியோ தற்போது சமூக ஊடங்களில் வைரலாகி வருகிறது. 


கொரோனா பாதிப்புகள் அதிகரித்து  காணப்படும் கோவை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் முதல்வர் இன்று ஆய்வுப் பணிகளை மேற்கொண்டார்.  






முன்னதாக, ஈரோடு - திருப்பூரில் கொரோனா சிகிச்சைக்கான கூடுதல் படுக்கை வசதிகளைத் திறந்து வைத்து, தற்காலிக பணியாளர் நியமனத்திற்கான ஆணைகளையும் வழங்கினார்.


கோவிட் தடுப்பு மற்றும் மருத்துவப் பணிகளை ஆய்வு செய்ய, முதலமைச்சர் மு க ஸ்டாலின், நேற்றும், இன்றும் ஈரோடு, திருப்பூர், கோவை மாவட்டங்களுக்கு பயணம் செய்து வருகிறார்.