ஐ.ஏ.எஸ்., அலுவலர்கள் 20 பேரைப் பணியிடமாற்றம் செய்து அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தலைமைச் செயலர் இறையன்பு ஐ.ஏ.எஸ்., வெளியிட்டுள்ள இந்த அறிவிக்கையின்படி, நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் பிரவீன் பி.நாயர் ஐ.ஏ.எஸ்., தற்போது கிராமப்புற மற்றும் பஞ்சாயத்துராஜ் இயக்குநராகப் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். 


டி.என்.பி.எஸ்.சி., தேர்வு கட்டுபாட்டாளராக சுதன் ஐ.ஏ.எஸ்., சமக்ர சிக்‌ஷா மாநிலத் திட்ட இயக்குநராக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். விழுப்புரம் மாவட்ட ஆட்சியராக இருக்கும் அண்ணாதுரை ஐ.ஏ.எஸ்., விவசாயத்துறை இயக்குநராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் ஐ.ஏ.எஸ்., கூட்டுறவு சங்கங்களின் பதிவாளராகப் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் எம்.பி.சிவனருள் பதிவுத்துறை ஐ.ஜி.யாகப் பணிமாற்றம் செய்யப்பட்டுள்ளார். கோவை மாவட்ட ஆட்சியராக இருக்கும் நாகராஜன் ஐ.ஏ.எஸ்., நிலநிர்வாக ஆணையாளராக மாற்றம். திருவள்ளூர் மாவட்ட ஆட்சியராக இருக்கும் பொன்னையா நகராட்சி நிர்வாக இயக்குநராக மாற்றப்பட்டுள்ளார். திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி ஐ.ஏ.எஸ்., சுற்றுலாத்துறை இயக்குநராக மாற்றப்பட்டுள்ளார்.


வணிகவரித்துறைக் கூடுதல் ஆணையர் லட்சுமிப்பிரியா ஐ.ஏ.எஸ். தொழில்நுட்பக் கல்வி இயக்குநராக பணிமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.கணக்கெடுப்பு மற்றும் குடியேற்றங்களின் ஆணையர் செல்வராஜ் ஐ.ஏ.எஸ்., நகர பஞ்சாயத்துத்துறை ஆணையராகப் பணிமாற்றம் செய்யப்பட்டுள்ளார். 

Also Read:”பெண்களும் அர்ச்சகர்கள் ஆகலாம்” என்னும் அறிவிப்பு : விமர்சனங்களும், விளக்கங்களும்!