தமிழ்நாடு மீனவர்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
தமிழ்நாடு மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையினர் தாக்குதல் அதிகரித்து வருவதை தடுக்க கோரி வெளியுறத்துறை அமைச்சர் ஜெய்ஷங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார். தாக்குதல் சம்பவங்கள் மீனவர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்துவதுடன் வாழ்வாதாரத்தை பாதிப்பதாகவும் அவர் கடித்ததில் குறிப்பிடுள்ளார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதத்தின் விவரம்
”தமிழ்நாட்டு மீனவர்கள் மீதான இலங்கை நாட்டினரின் தாக்குதல் அதிகரித்து வருகிறது. 2023 ஆகஸ்ட் 21 ஆம் தேதி மட்டும் ஒன்பது சம்பவங்கள் பதிவாகியுள்ளது கவலைக்குரியது. இத்தகைய தாக்குதல் சம்பவங்கள் மீளவர்களுக்கு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்துவதோடு, அவர்களின் வாழ்வாதாரத்தைக் கடுமையாக பாதிப்படைகிறது.
இந்திய மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் உடல் ரீதியாக பாதிப்பு ஏற்படுத்தியுள்ளதோடு, மீனவர்களிடமிருந்த பொருட்களையும் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். இதன் காரணமாக பாதிக்கப்பட்ட மீனவர்கள் ஆதரவற்ற நிலையில், மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். தாக்குதல் சம்பவங்களால் உளைச்சலுக்கு காயமடைந்த மீனவர்கள், அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். மீனவர்களின் மீதான தாக்குதலின் தீவிரத்தை உணர்த்துவதாக உள்ளது.
இந்திய மீனவர்களின் வாழ்வாதாரம் கடற்பகுதியைச் சார்ந்துள்ள நிலையில், இத்தகைய தொடர்ச்சியான பன்முறைச் செயல்கள், அவர்களின் வாழ்க்கையை கேள்விக்குறியாக்குவதுடன், அவர்களின் குடும்பங்களையும் சமூகங்களையும் பாதிக்கின்றன. இந்தச் சூழ்நிலையில், மத்திய அரசு உடனடியாக தலையிட்டு இத்தாக்குதல்களில் ஈடுபட்டவர்களைக் கண்டறிந்து- சட்டத்தின்முன் நிறுத்திடத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அதோடு, உரிய தூதரக வழிமுறைகளை பயன்படுத்தி இலங்கை அரசுடன் தொடர்புகொண்டு மீனவர்களின் பாதுகாப்பை உறுதி செய்திட வேண்டும்.” என்று கடித்தில் குறிப்பிட்டுள்ளார்.