துபாய் நாட்டில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்த இருவரின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.


துபாயில் உள்ள டேரா என்ற பகுதியில் உள்ள குடியிருப்பு கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 16 பேர் உயிரிழந்தனர். இதில் இந்தியாவைச் சேர்ந்த நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.


நிவாரணம் அறிவிப்பு:


முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது இரங்கல் செய்தியில் “டேரா  என்ற இடத்தில் தங்கி பணிபுரிந்து வந்த கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் வட்டம், ராமராஜபுரம் கிராமத்தைச் சேர்ந்த இமாம் காசீம்,  மற்றும் அதேபகுதியைச் சேர்ந்த முகமது ரபிக் தபெ.சலியாகுண்டு ஆகிய இருவரும் குடியிருப்பு பகுதியில் ஏற்பட்ட தீவிபத்தில் உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.


உயிரிழந்தவர்களின் உடல்களை விரைவில் தமிழ்நாட்டிற்கு கொண்டுவருவதற்கு இந்திய தூதரகம் மூலம் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் உறுதியளித்துள்ளார். அதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா பத்து லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.


தீவிபத்து:


தேராவின் அல் ராஸ் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம் ஒன்றில் சனிக்கிழமையன்று திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் 16 பேர் உயிரழ்ந்துள்ளதாகவும், 9 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. கட்டிடத்தின் 4-வது மாடியில் ஏற்பட்ட தீ, மற்ற பகுதிகளுக்கும் பரவியது. அப்பகுதியை கரும்பும்கை சூழந்ததால், அங்கிருந்தவர்கள் வெளியேற முடியாமல் தவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்து துபாய் தீயணைப்புப் படையினர் இரண்டு மணி நேர போராட்டத்திற்கு பிறகு, தீயை அணைத்தனர். 


இந்த விபத்தில் உயிரிழந்தவர்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்த அப்துல் காதர், சாலியாகுந்த் ஆகிய 2 ஆண்கள், கேரள மாநிலம் மலப்புரத்தைச் சேர்ந்த ரிஜேஷ் மற்றும் அவர் மனைவி ஜெஷி என 4 இந்தியர்கள், பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த மூவர்,நைஜீரியாவைச் சேர்ந்த பெண் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றனர்.


இந்த விபத்திற்கு குடியிருப்பு கட்டிடத்தில் போதிய அளவில் பாதுகாப்பு வசதிகள் இல்லாததே காரணம் என்று முதற்கட்ட ஆய்வில் தெரியவந்துள்ளதாகவும் இது தொடர்பாக விரிவான விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் துபாய் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.




மேலும் வாசிக்க..


விஜய் மக்கள் இயக்கம் மக்களுக்கான கட்சியாக மாறுகிறதா? புஸ்ஸி ஆனந்த் பரபரப்பு பேட்டி


Watch Video: ”நான் கிரவுண்ட்டுக்குள்ள வரல, இதுதான் காரணம்” - மகன் அர்ஜுனை கண்டு சச்சின் நெகிழ்ச்சி..