Tamil Nadu CM Update:விபத்தில் அடிபட்ட சிறுவன்.. உயிரை காப்பாற்றிய முதல்வர் திட்டம்.. நெகிழ்ச்சியில் நன்றி கூறிய மருத்துவர்

இரத்த கசிவும், மூளை அழுத்தமும் அதிகமானதால் அன்றே நியூரோ சர்ஜன் மருத்துவர்.பாலசுப்பிரமணியன் வர்ஷாந்தின் மண்டை ஓட்டை திறந்து, அறுவை சிகிச்சை செய்தார்.

Continues below advertisement


13 வயது வர்ஷாந்த் என்ற சிறுவன் முதல்வரின் இன்னுயிர் காப்போம் - நம்மை காக்கும் 48 திட்டத்தின் கீழ் காப்பற்றப்பட்டதற்கு மருத்துவர் S.T.ஷியாம்சுந்தர் நன்றி தெரிவித்துள்ளார். 

Continues below advertisement

இது குறித்து அவர் கூறியதாவது, “ 13.1.2022 அன்று இரவு சாலை விபத்தில்காயமடைந்த வர்ஷாந்தை (13) மருத்துவமனைக்கு அழைத்து வந்தார்கள். சோதனை செய்ததில் அவர் தலையில் அடிபட்டது தெரியவந்தது. சி.டி ஸ்கேன் பரிசோதனையில் வலது முன் மூளையிலும், வலது காது புற பகுதியில்  மூளையில் இரத்த கசிவு ஏற்பட்டு இருந்தது. அதனைத் தொடர்ந்து அவருக்கு ICU வில்  சிகிச்சை அளிக்கப்பட்டது. 12 மணி நேரம் கழித்து மூளையில் இரத்த கசிவு அதே அளவில் உள்ளதா, அதிகரித்துள்ளதா என்பதற்காக மீண்டும் CT ஸ்கேன் பரிசோதனை செய்யப்பட்டது. 


இரத்த கசிவும், மூளை அழுத்தமும் அதிகமானதால் அன்றே நியூரோ சர்ஜன் மருத்துவர்.பாலசுப்பிரமணியன்  வர்ஷாந்தின் மண்டை ஓட்டை திறந்து, அறுவை சிகிச்சை செய்தார். அதனைத் தொடர்ந்து இரத்த கசிவு அகற்றப்பட்டது. தற்போது  வர்ஷாந்த் நல்ல நிலையில் உள்ளார். 


சாலை விபத்தில் பாதிக்கப்படக்கூடிய ஏழை நோயாளிகளுக்கு இன்னுயிர் காப்போம் - நம்மை காக்கும் 48 திட்டம் - மிகப் பெரிய நன்மை பயக்கும். மிகப்பெரிய அறுவை சிகிச்சை மேற்கொள்ளவும் இத்திட்டத்தில் அனுமதி அளித்து திட்டத்தை வழங்கிய முதலமைச்சர் அவர்களுக்கு நன்றி” என்று அவர் குறிப்பிட்டுள்ளார். 

 

 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

Continues below advertisement