விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த கொங்கரப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த காயத்ரி தனசேகரன் என்பவர் ஊராட்சி மன்ற தலைவராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் பொங்கல் விழாவுக்காக ஊராட்சி மன்ற அலுவலகத்தை சுத்தம் செய்து கட்டிடத்திற்கு புதியதாக வண்ணம் பூசியுள்ளனர். இந்த நிலையில் அப்பகுதியைச் சேர்ந்த ஒரு சிலர் ஊராட்சி மன்ற அலுவலகத்தின் மீது மாட்டின் சாணத்தை வாரி அடித்ததுடன் கொங்கரப்பட்டு கிராமத்தில் அமைக்கப்பட்ட குடிநீர் குழாய்களை வேண்டும் என்று ஒரு சிலர் அதனை இரவு நேரங்களில் உடைத்துள்ளனர்.


Villupuram: பெண் என்பதால் அவமதிக்கப்படும் ஊராட்சிமன்றத் தலைவர்




மேலும் கொங்கரப்பட்டு கிராமத்தில் செயல்பட்டு வரும் அரசு பள்ளியில் குடிநீர் வசதி இல்லாத காரணத்தினால் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியும் குடிநீர் குழாய்களையும் ஊராட்சி மன்ற தலைவர் அமைத்து கொடுத்த நிலையில் இதனையும் உடைத்து சேதப்படுத்தி உள்ளனர்.  மேலும் அவ்வூரில் உள்ள அரசு கட்டிடங்கள் மற்றும் பள்ளியில் இரவு நேரங்களில் மது அருந்தும் செயல் தொடர்ந்து நடைபெற்று வந்தது.



இந்த நிலையில் நடத்தப்பட்ட கிராமசபை கூட்டத்தில் ஊர்மக்கள் முன்னிலையில் பேசிய ஊராட்சி மன்றத் தலைவர் காயத்ரி தனசேகரன், அரசு கட்டங்களை மது அருந்துவதற்காக யாரும் பயன்படுத்த வேண்டாம் என்று வேண்டுகோள் வைத்தார். அப்பொழுது அப்பகுதியை சேர்ந்த சிவக்குமார், ஜெயபால், ரெட்டணை பகுதியை சேர்ந்த சிவா ஆகியோர்  எங்களுக்கு குடிப்பதற்கு தனியாக ஒரு இடம் கட்டித் தாருங்கள் என சண்டை போட்டுள்ளனர், இந்த இந்நிலையில் தான் போகி அன்று  ஊராட்சி மன்ற அலுவலகத்தில் மீது சாணி பூசப்பட்ட சம்பவம் நடைபெற்றது. 




இதனை ஏபிபி நாடு செய்தியாக வெளியிட்ட பின்பு உடனடியாக சம்பவ இடத்தில் செஞ்சி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு இதுபோன்ற குற்றச் செயல்களில் ஈடுபட்டதாகவும் மேலும் ஊராட்சி ஒன்றிய தலைவருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் சிவக்குமார், ஜெயபால், ரெட்டணை பகுதியை சேர்ந்த சிவா ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து செஞ்சி போலீசார் கைது செய்தனர். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண