நாளை பிரதமர், குடியரசு தலைவரை நாளை சந்திக்க உள்ள நிலையில் சென்னையில் இருந்து முதலமைச்சர் மு.க ஸ்டாலின் டெல்லி புறப்பட்டார். நாளை காலை 11. 30 மணிக்கு புதிதாக பதவியேற்று கொண்ட குடியரசு தலைவர் திரௌபதி முர்முவையும், மாலை 4. 30 மணிக்கு பிரதமர் மோடியை முதலமைச்சர் முக ஸ்டாலின் சந்திக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. 


நீட் விலக்கு மசோதா உள்ளிட்ட தமிழ்நாட்டின் கோரிக்கைகளை முதலமைச்சர் முக ஸ்டாலின் முன்வைப்பார் என்றும், செஸ் ஒலிம்பியாட் தொடரில் பங்கேற்ற பிரதமர் மோடிக்கு நேரில் நன்றி தெரிவிக்க இருப்பதாகவும் தெரிய வந்துள்ளது. 


முன்னதாக, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பிறந்தநாள் விழாவில் முதலமைச்சர் முக ஸ்டாலின் கலந்து கொண்டு டெல்லி பயணம் குறித்து பேசினார். அதில், “ டெல்லிக்கு நான் கேள்வி கேட்கப் போகிறேன். காவடி தூக்கப்போகவில்லை என எம்.பி திருமாவளவனின் 60வது பிறந்த நாள் விழாவில் அதிரடியாக முதல்வர் ஸ்டாலின் பேசியுள்ளார். மேலும்,பாஜக மற்றும்  RSS உடன் திமுக ஒருபோதும் சமரசம் செய்துகொள்ளாது.






தம்பியுடையான் படைக்கு அஞ்சான் என்பதற்கு தம்பி திருமாவளவன் உதாரணம். தேர்தல் வரும் போகும், இயக்கங்களும் கொள்கைகளும் எப்போதும் இருக்கும். நமது கூட்டணி கொள்கைக் கூட்டணி அதனை யாராலும் பிரிக்க முடியாது. பாஜகவிற்கும் திமுகவிற்கும் எந்த தொடர்பும் கிடையாது. பாஜக மற்றும்  RSS உடன் திமுக ஒருபோதும் சமரசம் செய்துகொள்ளாது. தமிழ்நாடு அரசு சனாதனவாதிகளால் அதிகப்படியான தாக்குதலுக்கு ஆளாகிவருகிறது. 


பெரியார், அண்ணா, கலைஞரின் திராவிட கருத்துக்களை நிறைவேற்றவே ஆட்சி செய்கிறோம். இந்த விழாவை முடித்து விட்டு டெல்லிக்கு செல்லவிருக்கிறேன். டெல்லிக்கு நான் கேள்வி கேட்கப் போகிறேன், காவடி தூக்கப் போகவில்லை எனவும் அதிரடியாக கூறியுள்ளார். திமுகவின் கொள்கைகளை ஒருபோதும் விட்டுத் தரமாட்டோம். விசிகவிற்கும், திமுகவிற்கும் உள்ள உறவு தாய்-பிள்ளை உறவு, இது எப்போதும் தொடரும். பெரியார், கலைஞர் 95 வயதுவரை  வாழ்ந்து மக்கள் பணி ஆற்றினர், அவ்வகையில் திருமாவளவனும் மக்கள் பணி செய்யவேண்டும் எனவும் முதல்வர் ஸ்டாலின் பேசியுள்ளார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண