கொரோனா தொற்று நோய் குறைந்ததால்தான் டாஸ்மாக் கடை திறக்கப்படுகிறது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கமளித்துள்ளார்.


தமிழ்நாட்டில் கொரோனா தொற்று பரவலை குறைக்க மேலும் ஊரடங்கை ஒரு வார காலம் நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ள நிலையில், டாஸ்மாக் கடைகளை 27 மாவட்டங்களில் திறக்க தமிழக அரசு அனுமதி அளித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. இதற்கு அரசியல் கட்சி தலைவர் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.


L Murugan on TASMAC : ’தாய்க்குலங்கள் எதிர்த்தும் டாஸ்மாக்கைத் திறக்கவேண்டுமா?’ - எல்.முருகன்


இந்நிலையில், குறுவை பாசனத்திற்காக மேட்டூர் அணையை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முதல்முறையாக இன்று திறந்து வைத்து காவியாற்றில் மலர் தூவினார். இதன்பின்னர் செய்தியாளர்களை அவர் சந்தித்தபோது டாஸ்மாக் திறப்பு குறித்து விளக்கம் அளித்தார்.


அப்போது, சில மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு குறைந்துள்ளதால் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளதாகவும், அதன் அடிப்படையில்தான் டாஸ்மாக் கடைகளுக்கு அனுமதி அளித்து இருக்கிறோம் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். மேலும், தமிழ்நாட்டில் கொரோன ஓரளவு கட்டுக்குள் வந்துள்ளதாகவும் முதலமைச்சர் கூறினார். நிர்ணயிக்கப்பட்ட இலக்கை தாண்டி உணவுத்துறையில் தமிழ்நாடு சாதனை படைக்கும் என்றும் கூறினார். மேலும், தமிழ்நாட்டிற்கு தடுப்பூசி அதிகளவில் வேண்டும் என்று ஒன்றிய அரசிடம் தொடர்ந்து கேட்டு வருவதாக கூறிய முதலமைச்சர், டெல்லியில் வரும் 17ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க நேரம் கேட்டுள்ளதாகவும் கூறினார். 


27 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்ததற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்திருந்தார். ஊரடங்கு தளர்வுகளின் ஒரு கட்டமாக தமிழ்நாட்டில் மதுக்கடைகளை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை திறக்க தமிழக அரசு அனுமதி அளித்திருக்கிறது. மக்கள் நலனுக்கு எதிரான இந்த நடவடிக்கை கடுமையாக கண்டிக்கத்தக்கது என தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார்.




முன்னதாக, நேற்று டாஸ்மாக் கடைகள் காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரை செயல்பட  அனுமதிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. நோய் தோற்று அதிகமாக பரவி வரும் 11 மாவட்டங்களை தவிர்த்து மீதமுள்ள 27 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது.


எந்தெந்த மாவட்டங்களில் டாஸ்மாக் கிடையாது ?


கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய 11 மாவட்டங்களில் தொடர்ந்து நோய் தோற்று அதிகமாக காணப்படுகிறது, அதனால் நோய் பரவல் தீவிரத்தை குறைக்க இந்த குறிப்பிடப்பட்ட மாவட்டங்களில் டாஸ்மாக் திறக்க அனுமதி கிடையாது. மேற்குறிப்பிட்டுள்ள 11 மாவட்டங்கள் தவிர்த்து, தமிழகத்தில் மீதமுள்ள 27 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் 14.06.2021 முதல் திறக்கப்படும். காலை 10 மணிக்கு திறக்கப்படும் டாஸ்மாக் மாலை 5 மணிவரை செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.


Tasmac Shops in Tamil Nadu: ‛ஆட்சி மாறியும் காட்சி மாறலயே’ வில்லையே’ டாஸ்மாக் திறப்புக்கு ராமதாஸ் கண்டனம்