சென்னையில் அரசு மாநகர பேருந்தில் திடீரென ஏறி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.


சென்னை துரைப்பாக்கம் அருகே கண்ணகி நகரில் சென்றுக்கொண்டிருந்த முதலமைச்சர் திடீரென்று காரில் இருந்து இறங்கி, M 19-B தி.நகர் - கண்ணகி நகர் வழித்தட பேருந்தில் ஏறிச்சென்று பார்வையிட்டார். அப்போது, பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்த பெண்களிடம் மகளிருக்கான இலவச பேருந்து பயண திட்டம் குறித்து முதலமைச்சர் கேட்டறிந்தார். முதலமைச்சரை நேரில் பார்த்த மகிழ்ச்சியில் மக்கள் திகைப்புடன் இருந்தார். இதில், சிலர் முதல்வருடன் செல்பியும் எடுத்துக்கொண்டனர்.