தனது பணியை பிரஷராக நினைக்காமல், பிளஷராக நினைப்பதாக தமிழ்நாடு தலைமைச் செயலர் வெ.இறையன்பு தமிழ் நாளிதழ் ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ளார்.


தலைமை செயலர் பணி மிகவும் ‘பிரஷராக இருக்கும். எப்படி சமாளிக்கிறீர்கள்?’ என்று கேட்கின்றனர்.


பிரஷர் என்று நினைத்தால் பிரஷர்... ‘பிளஷர்’ என்று நினைத்தால் பிளஷர். நான் பிளஷராக நினைத்துப் பணியாற்றுகிறேன்.


அரசு அதிகாரியாக வேலை செய்தபடியே நிறைய புத்தகங்கள் எழுதுகிறீர்கள். எப்போது நேரம் கிடைக்கிறது? என்றும்  கேட்கின்றனர்.


இதற்கு, கேரள முன்னாள் முதல்வர் மறைந்த இ.எம்.எஸ். நம்பூதிரிபாட்டை உதாரணமாக கூறுவேன்.அவர் எழுதியிருக்கும் புத்தங்களை வைத்து தனியாக ஒரு நூலகமே வைக்கலாம். இதுகுறித்து அவரிடம் கேட்ட போது, 'தினமும் ஒரு மணி நேரம் படிப்பேன்; ஒரு மணி நேரம் எழுதுவேன். தினமும் நான்கு பக்கங்கள் எழுதினால், ஒரு வருஷத்துக்கு 1,400 பக்கங்கள் எழுதலாம்’ என்றார். மேலும் படிக்க: லஞ்சம் வாங்கினால் உடனடி பணிநீக்கம் - தலைமை செயலர் இறையன்பு எச்சரிக்கை


என் பணி காலை 5:00 ஆரம்பிக்கிறது. சட்டம் - ஒழுங்கு பிரச்னைகள் இருக்கின்றனவா, முக்கிய செய்திகள் என்னென்ன என்று தொலேைபசி விசாரிப்புகளுடன் தொடங்கும்பணி, இரவு உறங்கச் செல்லும் வரை தொடர்கிறது.  IRAIANBU IAS Profile : யார் இந்த இறையன்பு?


சப் கலக்டராக பணியை தொடங்கி, தற்போது தலைமை செயலராகி இருக்கிறேன். நேர்மையும், உழைப்பும் இருந்தால், சவால்களை எளிதாக சமாளிக்கலாம். நேர்மையும், உழைப்பும் என் இரு கண்கள்.


இலக்கு, நோக்கம் என இரண்டு விஷயங்கள் இருக்கின்றன. எழுத்தாளராக ஆவேன் என்பது இலக்கு; எழுத்தின் மூலமாக சமூகத்தில் மாற்றங்களை ஏற்படுத்துவேன் என்பது
நோக்கம்.மேலும் படிக்க: Tamil Nadu Chief Secretary: இரண்டு காய்கறிகள் போதும்; ஆய்வு ஆடம்பர உணவுக்கு தடை போட்ட இறையன்பு!


மருத்துவர் ஆவேன் என்பது இலக்கு; எளிய மக்களுக்கு பிணிகளை அகற்றுவதற்காக மருத்துவர் ஆவேன் என்பது நோக்கம். எல்லாருமே இலக்கை நோக்கித்தான் பயணிக்கின்றனர். ஆனால், யாரெல்லாம் நோக்கத்தை நோக்கிப் பயணிக்கின்றனரோ, அவர்களே இலக்குகளை அடைந்து, இலக்குகளை நோக்களுக்காகப் பயன்படுத்திக்கொள்கின்றனர்.


நீங்கள் விரும்பும் எந்தப் பணியை செய்தாலும் சரி, உங்கள் வாழ்க்கைக்கு ஏதாவது நோக்கத்தை வரையறுத்துக்கொள்ளுங்கள்.


அதை நோக்கிப் பயணிப்பதில் சவால்கள் எழும். அவற்றை நேர்மையுடன் எதிர்கொள்ள வேண்டும். நேர்மையைக் கைக்கொண்டு, சளைக்காமல் உழைத்தால், எளிதில் இலக்கை அடையலாம். சிறு வயதிலேயே இதைப் பழக்கிக் கொள்வது நல்லது. மேலும் படிக்க: "எந்த திட்டத்தின் கீழும் நான் எழுதிய புத்தகங்களை வாங்கக்கூடாது" - தலைமைச் செயலாளர் இறையன்பு


 


மேலும் செய்திகளை காண: ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


 


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


 


பேஸ்புக் பக்கத்தில் தொடர


 


ட்விட்டர் பக்கத்தில் தொடர


 


யூடியூபில் வீடியோக்களை காண