மகளிர் காவல் பொன்விழா ஆண்டு:


தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை, நேரு உள் விளையாட்டு அரங்கில் தமிழ்நாடு காவல்துறையில் மகளிர் காவலர்கள் பொன்விழா ஆண்டு நிகழ்ச்சியில், சிறப்புத் தபால் உறையினை வெளியிட்டு, 'அவள்' திட்டத்தை தொடங்கி வைத்து , மிதிவண்டித் தொடர் பேரணியை கொடியசைத்துத் துவக்கி வைத்து விழாப் பேருரையாற்றினார்.


இந்த நிகழ்ச்சியில் தலைமைச் செயலர் இறையன்பு, உள்துறை செயலர் பணிந்திர ரெட்டி, சட்டம் ஒழுங்கு டிஜிபி சைலேந்திரபாபு,  சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால்,  ஓய்வு பெற்ற டிஜிபிக்கள் திலகவதி ,லத்திகா சரண், காவல்துறை பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.


பெண்காவலர்கள் பொன் விழா ஆண்டு:


இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின், “ பெண்களுக்கு சொத்துரிமை, பெண்கள் காவலர்களாக்கி துப்பாக்கியை கையில் ஏந்த வைத்தவர். இன்று 35,329 பெண் காவலர்கள் உள்ளனர். அதற்கு விதை விதைத்தவர் கலைஞர் தான். பொன் விழா கொண்டாடும் நிலையில் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள். பல கோடி  மக்களின் பாதுகாப்பு மட்டுமல்லாமல், முதலமைச்சருக்கும் பாதுகாப்பாக இருக்கின்றீர்கள். சீருடையில் மாற்றம் கொண்டு வந்தார் கலைஞர்.


ஒரு சகாப்தத்தின் பொன் விழாவில் அவருடைய மகனான நான் முதலமைச்சராக கலந்துக்கொள்வதில் பெருமையடைகிறேன். பெண்களுக்கான விழா இது. வீட்டையும் நாட்டையும் காத்து வருகின்றனர். ஆண் காவலர்களுக்கு ஒரு சல்யூட் என்றால், பெண் காவலர்களுக்கு இரண்டு சல்யூட். காவல் துறை இருக்கும் அனைத்து பிரிவிகளிளும் பெண்கள் பணியாற்றி வருகின்றனர். சட்டம் ஒழுங்கு பிரிவில் 37% பெண் காவல் ஆய்வாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.


புதிய காவல்நிலையங்கள்:


பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் அனைத்து உட்கோட்டங்களில் அமைக்க வேண்டும். ஆனால 41 உட்கோட்டத்தில் இல்லை. 2021 ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் 20 புதிய மகளிர் காவல் நிலையம் அமைக்கப்பட்டது. அதேபொல் கோயம்பேடு, கோட்டூர்புரம் ஆகிய பகுதிகளில் புதிதாக மகளிர் காவல் நிலையம் அமைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது” என கூறினார். 


இந்த பொன் விழாவில் பெண் காவலர்களுக்கு நவரத்திணம் போன்ற 9 திட்டங்கள் அறிமுகப்பட்டுத்தப்பட்டது. 



  1. பெண் காவலர்களுக்கு roll call இனி காலை 7  மணிக்கு பதில் 8 மணிக்கு நடத்தப்படும்.

  2. சென்னை மற்றும் மதுரை ஆகிய பெருநகரங்களில் பெண் காவலர்கள் தங்கும் விடுதிகள் விரைவில் அமைக்கப்படும்

  3. அனைத்து காவல் நிலையங்களிலும் பெண் காவலர்களுக்கென கழிவறை வசதியுடன் ஓய்வு அறை கட்டித்தரப்படும்

  4. காவல் குழந்தைகள் காப்பகம் விரைவில் தேவையான அளவு அமைத்துத்தரப்படும்

  5. பெண் காவல் ஆலினர்களின் திறமையை முழுமையாக அங்கீகரிக்கும் வகையில் கலைஞர் காவல் பணி விருதும் கோப்பையும் வழங்கப்படும்

  6. பெண் காவலர்களின் விருப்படி விடுப்பு மற்றும் பணியிட மாற்றம் வழங்கப்படும்

  7. பெண் காவலர்களுக்கு துப்பாக்கிச்சுடு போட்டி ஆண்டு தோறும் நடத்தப்படும்

  8. ஆண்டுதோறும் காவல் துறையில் பெண்கள் என்ற மாநாடு நடத்தப்படும்

  9. டிஜிபி அலுவலகத்தில் பணி வழிக்காட்டும் ஆலோசனைக்குழு அமைக்கப்படும்


என 9 திட்டத்தினை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார்.