10th Exam Hall Ticket: 10-ஆம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கான ஹால் டிக்கெட் இன்று வெளியீடு - எப்படி டவுன்லோடு செய்வது?

10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் தனித்தேர்வர்களுக்கான ஹால் டிக்கெட் இன்று வெளியாகிறது.

Continues below advertisement

தமிழ்நாட்டில் தற்போது 12ம் வகுப்பு, 11ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், 10ம் வகுப்பு தேர்வு வரும் ஏப்ரல் மாதம் 6-ஆம் தேதி தொடங்க உள்ளது. அவர்களுடன் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வை தனித்தேர்வர்களும் எழுத உள்ளனர். தனித்தேர்வர்களுக்கான ஹால் டிக்கெட் 17-ந் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், தனித்தேர்வர்களுக்கான ஹால் டிக்கெட் இன்று வெளியாகிறது.

Continues below advertisement

ஹால்டிக்கெட் எனப்படும் தேர்வுக்கூட நுழைவுச்சீட்டை  அரசுத்தேர்வுகள் இயக்ககத்தின் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 10ம் வகுப்பு பொதுத்தேர்விற்கு விண்ணப்பித்துள்ள தனித்தேர்வர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளம் மூலமாக ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

எவ்வாறு கிளிக் செய்வது?

  • மேலே குறிப்பிட்ட இணையதளத்திற்கு முதலில் செல்லவும்
  • அந்த இணையதளத்தில் Hall Ticket என்ற வாசகத்தை கிளிக் செய்யவும்
  • அதில் Public Examination April 2023 என்ற பக்கம் தோன்றும்.
  • அதன் உள்ளே SSLC Public Examination April 2023 HALL TICKET DOWNLOAD என்பதை கிளிக் செய்யவும்.
  • அதில் உங்களது விண்ணப்ப எண்(application Number)/ நிரந்தர பதிவெண் (Permanent Register Number) மற்றும் பிறந்த தேதியினை பதிவு செய்யவும்
  • பின்பு ஹால் டிக்கெட்டை பதிவு செய்து கொள்ளவும்.

அறிவியல் பாட செய்முறை தேர்வுகள்:

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் அறிவியல் பாடங்களுக்கான செய்முறை தேர்வுகள் வரும் 20-ந் தேதி முதல் 24-ந் தேதி வரை அறிவியல் பாட செய்முறை பயிற்சிகள் நடைபெற்ற பள்ளிகளிலே நடைபெற உள்ளது. ப்ராக்டிக்கல் தேர்வுக்கான விவரத்தை தனித்தேர்வர்கள் செய்முறை பயிற்சி பெற்ற பள்ளி தலைமையாசிரியரை அணுகி அறிந்து கொள்ள வேண்டும்.

தேர்வுகளுக்கான கால அட்டவணையை www.dge.tn.gov.in என்ற இணையதளத்திற்கு அறிந்து கொள்ளலாம். 10ம் வகுப்பு பொதுத்தேர்வு 12 ஆயிரத்து 800 பள்ளிகளில் நடைபெற உள்ளது. 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப்ரல் 6-ந் தேதி முதல் ஏப்ரல் 20-ந் தேதி நடைபெற உள்ளது. 10ம் வகுப்பு பொதுத்தேர்வு விரைவில் தொடங்க உள்ளதால் மாணவர்கள் மும்முரமாக தேர்வுக்கு தயாராகி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் வாசிக்கலாம்: 12ஆம் வகுப்பு, 10ஆம் வகுப்பு பாடங்களின் மாதிரி வினாத் தாளைக் காண: https://tamil.abplive.com/topic/question-bank/amp என்ற இணைப்பை க்ளிக் செய்யவும். 

மேலும் படிக்க: 12th ECONOMICS Question Bank: பிளஸ் 2 பொருளியல் பாடத்தில் சூப்பர் மதிப்பெண்கள் பெறலாம்- மாதிரி வினாத்தாள் இதோ!

மேலும் படிக்க: Madras University Result: சென்னை பல்கலைக்கழக தேர்வு முடிவுகள் எப்போது?- காத்துக்கிடக்கும் மாணவர்கள்

Continues below advertisement