Tamil Nadu Balloon Festival 2025: தமிழ்நாடு பலூன் திருவிழாவிற்கான டிக்கெட்டை எங்கு வாங்குவது? விலை எவ்வளவு? என்ற விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன. 


தமிழ்நாடு பலூன் திருவிழா:


தமிழ்நாட்டு மக்களின் பொழுதுபோக்கிறகாக மாநிலம் முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் அவ்வப்போது அரங்கேற்றப்பட்டு வருகிறது. அந்த வரிசையில் பொங்கல் தொடர் விடுமுறையை கருத்தில் கொண்டு, ஒவ்வொரு ஆண்டும் பலூன் திருவிழா நடத்தப்படுவது வழக்கம். அதன்படி, கண்களை கவரும் விதமான, தமிழ்நாடு சர்வதேச பலூன் திருவிழா (TNIBF) பத்தாவது ஆண்டாக இம்முறையும் நடைபெற உள்ளது. இந்நிகழ்வு உலகம் முழுவதிலுமிருந்து வந்துள்ள சூடான காற்று பலூன்களின் துடிப்பான காட்சியைக் காட்ட உள்ளது.



எங்கு? எப்போது நடைபெறும்?


தமிழ்நாடு சர்வதேச பலூன் திருவிழா இந்த ஆண்டு ஜனவரி 10ம் தேதி தொடங்கி ஜனவரி 19ம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த ஆண்டு பலூன் திருவிழா மிகப் பெரியதாகவும் சிறப்பாகவும் இருக்கும் என்று உறுதியளிக்கப்பட்டுள்ளது. அதன்படி,  மூச்சடைக்க செய்யக்கூடிய பலூன் விமானங்கள் மற்றும் உற்சாகமான கார்னிவல் நடவடிக்கைகள் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய நகரங்களில்  இடம்பெற உள்ளன. அதவாது சென்னை, பொள்ளாச்சி மற்றும் மதுரை ஆகிய நகரங்களில் தான் நடப்பாண்டிற்கான தமிழ்நாடு சர்வதேச பலூன் திருவிழா அரங்கேற உள்ளது.


தேதி & நேரம்:


1. சென்னை - ஜனவரி 10 -12, 2025


இடம்: திருவிடந்தை, கிழக்கு கடற்கரை சாலை (ECR)


விழா நேரம்: 3:00 PM - 9:30 PM


இதர நிகழ்வுகள்: 



  • ஷாப்பிங் எக்ஸ்போ

  • ஃபுட் கோர்ட்

  • குழந்தைகளுக்கான விளையாட்டுகள் 

  • லைவ் மியூசிக்

  • ஹாட் ஏர் பலூன் டெதரிங்: மாலை 4:30 மணி முதல்

  • இரவு ஒளிரும் பலூன் காட்சி: மாலை 5:30 மணி முதல்


2. பொள்ளாச்சி - ஜனவரி 14-16, 2025


இடம்: வலது கொங்கு நகரம், பொள்ளாச்சி மெயின் ரோடு, கோயம்புத்தூர் நெடுஞ்சாலை, ஆச்சிபட்டி


பலூன் புறப்படும் நேரம்: காலை 6:00 மணி முதல்


திருவிழா நேரம்: மதியம் 2:00 - இரவு 10:00 மணி வரை


இதர நிகழ்வுகள்:



  •  ஷாப்பிங் எக்ஸ்போ

  • ஃபுட் கோர்ட்

  • குழந்தைகளுக்கான விளையாட்டுகள் 

  • லைவ் மியூசிக்


3. மதுரை - ஜனவரி 18-19, 2025


இடம்: கலைஞர் நூற்றாண்டு ஜல்லிக்கட்டு அரங்கம்


திருவிழா நேரம்: 3:00 PM - 9:30 PM


இதர நிகழ்வுகள்



  •  ஷாப்பிங் எக்ஸ்போ

  • ஃபுட் கோர்ட்

  • குழந்தைகளுக்கான விளையாட்டுகள் 


டிக்கெட் விலை: இந்த ஆண்டு பங்கேற்பாளர்கள் தங்கள் விருப்பங்களுக்கு ஏற்ப பல்வேறு டிக்கெட் விருப்பங்களிலிருந்து தேர்வு செய்யலாம். அதன்படி, 



  • எலைட் (இருக்கை):  ரூ. 1,000

  • ஃபேன் பிட் (நின்றபடி பயணம்): ரூ.650

  • பொது நுழைவு அனுமதி: ரூ.200


ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்வது எப்படி?


தமிழ்நாடு சர்வதேச பலூன் திருவிழாவிற்கு உங்கள் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வது எளிமையானது மற்றும் வசதியானது. முதலில், 



  • Insider.in இணையதள முகவரிக்குள் நுழையவும்

  • பக்கத்தின் மேல் வலது மூலையில் அமைந்துள்ள சர்ச் பாரில் உங்கள் நகரத்தின் பெயரை உள்ளிடவும்.

  • தமிழ்நாடு சர்வதேச பலூன் திருவிழா (TNIBF) பட்டியலிடப்பட்டுள்ளதைக் கண்டறிந்ததும் , அதைக் கிளிக் செய்யவும்.

  • நீங்கள் வாங்க விரும்பும் டிக்கெட்டுகளின் எண்ணிக்கையைத் தேர்ந்தெடுக்கவும்.

  • உங்கள் கார்ட்டில் டிக்கெட்டுகளைச் சேர்க்கவும்.

  • உறுதிப்படுத்த உங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும்

  • உங்கள் டிக்கெட்டுகளை உறுதி செய்ய அதற்கான கட்டணத்தை செலுத்தவும்.