தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் வரும் 7ஆம் தேதி வரை நடைபெறும் என்றும், ஒமிக்ரான் பாதிப்பு காரணமாக முன்கூட்டியே கூட்டத் தொடர் முடிக்கப்படுவதாக அலுவல் ஆய்வு குழுவில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 


அதன் அடிப்படையில், நாளை மற்றும் மறுதினம் நடைபெறும் நிகழ்ச்சி நிரல் குறித்த தகவல் பின்வருமாறு : 


06.01.2022 (வியாழக்கிழமை)


இரங்கற் குறிப்புகள்:


சட்டமன்றப் பேரவை முன்னாள் உறுப்பினர்கள் மறைவு குறித்து இரங்கல் தீர்மானங்கள்மாண்புமிகு பேரவைத் தலைவர் கீழ்க்காணும் இரங்கல் தீர்மானங்களை பேரவைமுன் வைப்பார்:


(i) டாக்டர் கோ. ரோசய்யா. தமிழ்நாடு முன்னாள் ஆளுநர் அவர்களின் மறைவு குறித்து இரங்கல் தீர்மானங்கள்


(i) இந்திய முப்படைத் தலைமைத் தளபதி பிபின் ராவத், அவரது மனைவி, குரூப் கேப்டன் வருண் சிங் மற்றும் 11 இராணுவ உயர் அலுவலர்கள் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தது குறித்து இரங்கல் தீர்மானங்கள்


(i) திரு. வே. துரைமாணிக்கம், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் அவர்களின் மறைவு குறித்து இரங்கல் தீர்மானங்கள்


(iv) திரு. புனீத் ராஜ்குமார், பிரபல கன்னட திரைப்பட நடிகர் அவர்களின் மறைவு குறித்து இரங்கல் தீர்மானங்கள்


(v) பேராயர் டெஸ்மண்ட் டுட்டு, மனித உரிமைச் செயற்பாட்டாளர் அவர்களின் மறைவு குறித்து இரங்கல் தீர்மானங்கள்


ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் முன்மொழியப்பெற்று விவாதம் தொடங்குதல்,


 (i) 2021-2022-ஆம் ஆண்டின் கூடுதல் செலவிற்கான முதல் துணை நிதிநிலை அறிக்கை பேரவைக்கு அளித்தல்.


07.1.2022 (வெள்ளிக்கிழமை)


(i) ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்குப் பதிலுரை அளிக்கப்படும்.


(ii) 2021-2022-ஆம் ஆண்டின் கூடுதல் செலவிற்கான முதல் துணை நிதிநிலை அறிக்கையில் குறிப்பிடப்படும் மானியக்கோரிக்கைகள் மீது வாக்கெடுப்பு நடைபெறும்.


(Iv) 2021-2022-ஆம் ஆண்டின் கூடுதல் செலவிற்கான முதல் துணை நிதிநிலை அறிக்கையில் குறிப்பிடப்படும் மானியக் கோரிக்கைகள் குறித்த நிதி ஒதுக்கச் சட்டமுன்வடிவு அறிமுகம் செய்யப்படும்.


செய்தல், ஆய்வு செய்தல் மற்றும் நிறைவேற்றுதல், (விவாதமின்றி). (v) அவசரச் சட்டங்கள் தொடர்பான சட்டமுன்வடிவுகள் மற்றும் பிற சட்டமுன்வடிவுகள் அறிமுகம் செய்தல், ஆய்வு செய்தல் மற்றும் நிறைவேற்றுதல் நடைபெறும்.


(vi) ஏனைய அரசினர் அலுவல்கள் பேரவை வழக்கம்போல் காலை 10 மணிக்குள் கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


Also Read | TN Lockdown Update: சனி, ஞாயிறு கிழமைகளில் முழு ஊரடங்கு?? அதிகரிக்கும் கொரோனாவால் தீவிர ஆலோசனையில் முதல்வர்!


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண