கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக ஜார்ஜ் கோட்டையில் இருந்து சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்று வருகிறது. கொரோனா பரவல் காலத்தில் சிறப்பாக செயல்பட்ட முதலமைச்சருக்கு ஆளுநர் ரவி  பாராட்டு தெரிவித்தார். தொடர்ந்து புத்தாண்டு மற்றும் பொங்கல் பண்டிகை முன்னிட்டு வாழ்த்துகளையும் பரிமாறி கொண்டார். 


உரையில் பேசிய ஆளுநர், மேகதாது குறித்தும், முல்லைப்பெரியாறு குறித்தும் பேசினார். அதில் அண்டை மாநிலங்களுடன் நல்லுறவில் இருக்க வேண்டும், அதே நேரம் உரிமையை விட்டுக்கொடுக்க மாட்டோம் என்றார். மேகதாது அணை கட்ட கர்நாடக அரசை மத்திய அரசு ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது என்றார். அதேபோல தமிழகத்தில் இரு மொழிக் கல்வி தொடரும் என்றார். முல்லைப்பெரியாறு குறித்து பேசிய ஆளுநர் அணை நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த அரசு நடவடிக்கை எடுக்கும் என்றார்




மேலும் பேசிய அவர், தமிழக அரசை பாராட்டியும், நலத்திட்டங்களை பட்டியலிட்டார். குறிப்பாக கருணாநிதி, பெரியார்,பாரதியார் உள்ளிட்ட தலைவர்களை குறிப்பிட்டு பேசினார்.  அனைத்து சாதியினரும் அர்ச்சகர் குறித்து பேசிய ஆளுநர், ''தந்தை பெரியார், கலைஞர் கருணாநிதியின் கனவை நனவாக்கும் விதமாக அனைத்து சாதியினரையும் தமிழ்நாடு அரசு அர்ச்சகர்கள் ஆக்கியுள்ளது'' என்றார். அதேபோல தன்னுடைய நீண்ட உரையை முடித்த ஆளுநர், '' வாழிய செந்தமிழ்; வாழ்க நற்றமிழர்; வாழிய பாரத மணித்திரு நாடு'' என்ற பாரதியாரின் வரிகளைக்கூறி நிறைவு செய்தார்.


கூட்டம் தொடங்கியவுடன் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஆளுநர் உரையை படிக்கத் தொடங்கினார். அப்போது, மருத்துவ படிப்பில் சேர்வதற்கான நுழைவுத்தேர்வை ரத்து செய்வதற்காக தி.மு.க. தலைமையிலான அரசு நிறைவேற்றிய நீட் தேர்வு மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பாதை கண்டித்து அ.தி.மு.க., வி.சி.க. எம்.எல்.ஏ.க்கள் தொடரில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.


தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் காட்டுமன்னார்கோவில் எம்.எல்.ஏ. சிந்தனைச் செல்வன், திருப்போரூர் எம்.எல்.ஏ. எஸ்.எஸ். பாலாஜி, நாகை  எம்.எல்.ஏ. ஆளுர் ஷாநவாஸ், செய்யூர் எம்.எல்.ஏ. பனையூர் பாபு ஆகியோர் நீட் விவகாரத்தில் ஆளுநர் முறையாக நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து வெளிநடப்பு செய்தனர்.


வி.சி.க. உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்த சிறிது நேரத்தில் அ.தி.மு.க. உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்தனர். கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டு வரப்பட்ட அம்மா மினி கிளினிக் திட்டத்தை நிறைவு செய்தது, கடந்த ஆட்சியில் அமைச்சர்களாக பொறுப்பு வகித்தவர்களின் வீடுகளில் தொடர்ந்து ரெய்டு உள்ளிட்ட தமிழக அரசின் செயல்பாடுகளை கண்டித்து அ.தி.மு.க. உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.


 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண