College Reopen: தொடங்கியது முதலாமாண்டு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வகுப்புகள் - உற்சாகத்தில் மாணவர்கள்!

College Reopen:தமிழ்நாட்டில் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முதலாமாண்டு வகுப்புகள் இன்று தொடங்கின.

Continues below advertisement

தமிழ்நாட்டில் அரசு, கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முதலாமாண்டு வகுப்புகள் இன்று தொடங்கின. 

Continues below advertisement

கல்லூரிகளில் மாணவர்களை வரவேற்க சிறப்பு ஏற்பாடுகள் , ராகிங் போன்ற அத்துமீறல்களை தடுப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கவும் செய்ய கல்வி இயக்குநரகம் அறிவுறுத்தியுள்ளது. 164 அரசுக் கல்லூரிகளில் 84,899 இடங்கள் நிரம்பிய நிலையில் வகுப்புகள் இன்றுமுதல். 1,07,299 இடங்களில் 84,899 பேர் சேர்ந்த நிலையில் மற்ற இடங்களை ஒதுக்கீட்டின் படி, நிரப்ப அறிவுறுத்தப்பட்டுள்ளது.


புதுக்கோட்டையில் உள்ள தன்னாட்சி கல்லூரி ஒன்றில் மாணவர்களை வரவேற்று பதாகை வைத்துள்ளனர். அரசு மற்றும் தனியார் கல்லூரிகள் முதலாமாண்டு வகுப்புகள் தொடங்கியுள்ளன.

கொரோனா பெருந்தொற்று காலம் ஏற்படுத்திய பாதிப்பு காரணமாக  கடந்த இரண்டு ஆண்டுகளாக கல்லூரிகள் முதலாமாண்டு மாணவர்களுக்கு தாமதாக தொடங்கப்பட்டது.

இந்நிலையில், 2023-2024 கல்வியாண்டில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வகுப்பு தொடங்கியுள்ளது. கடந்த மே மாதம் 12-ம்  வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. இதைதொடர்ந்து உயர்கல்வி படிப்பிற்கான மாணவர் சேர்க்கை தொடங்கியது. அந்த வகையில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கான விண்ணப்பம் இணையவழி மூலம்  நடைபெற்றது. அதன்பின் மதிப்பெண்கள் அடிப்படையில் தர வரிசையில் கலந்தாய்வு நடைபெற்றது.  

 164 அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை முடிந்துள்ளது.இதிலுள்ள 1, 7,299 இடங்களில்  இரண்டு கட்ட கலந்தாய்வு மூலமாக  இதுவரை 36,626 மாணவர்களும், 48,275 மாணவிகளுமாக  மொத்தம்  84,899  மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். 

ஒரு சில கல்லூரிகளில் இன்னும் சில முக்கிய பாடப்பிரிவுகள் நிரப்பப்படாமல் உள்ளன. அவற்றை நிரப்பும் வகையில் நேரடி மாணவர் சேர்க்கை  4-ம்தேதி முதல் 7 -ம்தேதி வரை நடத்தப்படுகிறது. 

இம்முறை ஜூலை முதல் வாரத்திலேயே கல்லூரிகளில் முதலாமாண்டு வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன.


மேலும் வாசிக்க.

Apple Air-Pods: ஆப்பிள் ஏர்-பாட்ஸ் - உடல் சூட்டை கூட கண்டுபிடிக்குமாம்..! புதிய சாதனத்தில் இத்தனை வாவ்களா?!

Kalaignar Pen Award: ரூ.5 லட்சம் பரிசுடன் கலைஞர் எழுதுகோல் விருது: விண்ணப்பிப்பது எப்படி? விவரம்

Continues below advertisement