தமிழ்நாடு பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு மற்றும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


”23 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு”


நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, கரூர், நாமக்கல், ஈரோடு,கிருஷ்ணகிரி,சேலம், தர்மபுரி, திருப்பத்தூர்,திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கடலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை ஆகிய 23 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.




சென்னை:


சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.




நாளை 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு:


நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி, மதுரை,விருதுநகர், ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மற்றும் திருப்பத்தூர் ஆகிய 15 மாவட்டங்களில் நாளை மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.




வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே கனமழை குறித்து எச்சரித்திருந்தது. இந்நிலையில், தமிழ்நாட்டில் அடுத்த ஐந்து நாட்களுக்கு  இடி மற்றும் மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.




மீனவர்களுக்கான எச்சரிக்கை:


குமரிக்கடல் பகுதிகள் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். ஆகையால் இப்பகுதிகளுக்கு மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


MBBS in Tamil: இனி தமிழில் எம்பிபிஎஸ் படிக்கலாம்: பாடங்களைத் தமிழுக்கு மொழிமாற்றும் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகம்