கடந்த 2013 முதல் 2021 வரை வேளாண்மை துறையில் ரூ.1000 கோடி முறைகேடு நடைபெற்றுள்ளதாக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. தமிழக வேளாண்மை துறையில் கடந்த 10 ஆண்டுகளில்  1000 கோடி முறைகேடு தொடர்பாக முன்னாள் அமைச்சர்கள்  மற்றும் ஐஏஎஸ் அதிகாரிகள் மீது ஊழல் தடுப்பு கண்காணிப்பு பிரிவு உரிய விசாரணை நடத்த உத்தரவிட கோரி மணப்பாறையைச் சேர்ந்த அப்துல்லா என்பவர் வழக்கை தொடர்ந்தார். இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் சிவஞானம்,  ஆனந்தி அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ரூ.1000 கோடி முறைகேடு புகாருக்கு ஆளான ஐஏஎஸ் அதிகாரி தட்சிணா மூர்த்தியை எதிர்மனுதாரராக இந்த வழக்கில் சேர்க்க உத்தரவிட்டனர். இந்த முறைகேடு புகாரில் ஐஏஎஸ் அதிகாரி தட்சிணா மூர்த்தி பெயர் இடம்பெற்றதால் அவரை எதிர்மனுதாரராக சேர்க்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், சொட்டு நீர் பாசன உபகரணங்கள் வழங்கும் திட்டத்தில் முறைகேடு நடைபெற்றுள்ளதாகவும் வழக்கு தொடரப்பட்டது. விவசாயிகளுக்கான திட்ட பலன்களை விவசாயி அல்லாதோருக்கு வழங்கி மோசடி என தொடரப்பட்ட வழக்கை ஒத்திவைத்தது.




விவசாயிகளுக்கு உதவிடும் வகையில் கிசான் திட்டத்தை பிரதமர் மோடி 2018 டிசம்பரில் அறிவித்தார். ஒவ்வொரு ஏழை விவசாயிகளுக்கும் மாதம் ரூ.6 ஆயிரம் வங்கி கணக்கில் ஆண்டுக்கு 3 தவணையாக தலா ரூ.2 ஆயிரம் என வரவு வைக்கப்பட்டது. பிரதமர் கிசான் திட்டத்தில் தமிழகத்தில் 42 லட்சத்து 31 லட்சம் விவசாயிகளுக்கு 2019 ஆம் ஆண்டு 3 தவணையாக தலா ரூ.6 ஆயிரம் வங்கி மூலம் வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் அதிகளவு விவசாயிகள் இந்த திட்டத்தில் புதிதாக சேர்ந்தனர். இதனால் சந்தேகம் அடைந்த வேளாண்மை துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். விசாரணையில், பிரதமர் கிசான் திட்டத்தின் மாவட்ட வேளாண் துறை அதிகாரிகள் தங்கள் பகுதிகளில் உள்ள இ-சேவை மையத்துடன் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டு, முறைகேடாக பல லட்சம் விவசாயிகளை இந்த திட்டத்தில் சேர்த்து ரூ.1000 கோடிக்கும் மேல் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளது தெரியவந்தது.


முதல்வரின் பொருளாதார ஆலோசனைக்குழுவில் சமூக நீதி எங்கே? - வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. கேள்வி..!


இதைத்தொடர்ந்து கடந்த 13ம் தேதி வேளாண்மை துறை செயலாளர் ககன்தீப்சிங் பேடி மற்றும் வேளாண் துறை இயக்குனர் தட்சிணாமூர்த்தி ஆகியோர் முறைகேடு நடந்ததாக கூறப்படும் விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட சில மாவட்ட ஆட்சியர்களை சென்னை, தலைமை செயலகம் வரவழைத்து விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில், மாவட்ட ஆட்சியர்கள் தங்கள் மாவட்டத்தில் நடந்த முறைகேடுகள் குறித்து விரைவில் நடவடிக்கை எடுக்க வேளாண்மை துறை செயலாளர் உத்தரவிட்டார். 


இதனைத் தொடர்ந்து, வேளாண்மை துறை இயக்குனர் தட்சிணாமூர்த்தி கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம், ரிஷிவந்தியம், தியாகதுருகம் ஆகிய பகுதியில் ஆய்வு செய்தார். அப்போது சங்கராபுரம் தாலுகா அலுவலகம் அருகில் தனியார் கணினி மையத்தில் அரசு பயன்படுத்தும் கடவுச்சொல், பயனர் குறியீடு போன்றவை பயன்படுத்தப்பட்டு விவசாயிகள் அல்லாதோரை இந்த திட்டத்தில் சேர்க்கப்பட்டு முறைகேடு நடந்துள்ளது கண்டுபடிக்கப்பட்டது.


தெலுங்கானா: விசாரணைக்காக அழைத்துச்சென்ற பெண்மணி உயிரிழப்பு : என்ன நடந்தது?