கொரோனா தடுப்பூசி செலுத்த முன்பதிவு செய்யும் கோவின் இணையதளத்தில் தமிழ் மொழி சேர்க்கப்பட்டது. 


பொதுமக்கள் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்காக மத்திய அரசு கோவின் என்ற இணையதளத்தை சில மாதங்களுக்கு முன்பு அறிமுகப்படுத்தியது. இந்த இணையதளத்தில் தினசரி ஆயிரக்கணக்கானோர் முன்பதிவு செய்து வருகின்றனர்.


ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் மட்டுமே இருந்த இந்த இணையதளத்தை அனைத்து மாநில மக்களும் பயன்படுத்தும் வகையில் அரசால் அங்கீகரிக்கப்பட்ட மாநில மொழிகளிலும் பதிவு செய்வதற்கு ஏதுவாக மாநில மொழிகளையும் சேர்க்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்திருந்தனர்.


கோவேக்சினை விட கோவிஷீல்டு ‛செம்ம’ : ஆய்வில் தகவல்!


இந்த சூழலில், இந்த இணையதளத்தில் தெலுங்கு, கன்னடம், மலையாளம், பஞ்சாபி, மராத்தி உள்பட 9 மாநில மொழிகளை மத்திய அரசு கடந்த 4ஆம் புதியதாக இணைத்தது. ஆனால், இவற்றில் தமிழ் மொழி இடம்பெறவில்லை. நாட்டிலே அதிக பாதிப்பை கொண்ட எட்டு மாநிலங்களில் ஒன்றாக உள்ள தமிழ்நாட்டின் தமிழ்மொழி இணைக்கப்படாதது, தமிழ்நாட்டு மக்களுக்கும், தமிழ் ஆர்வலர்களுக்கும், அரசியல் கட்சியினருக்கும் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும், மத்திய அரசின் இந்த செயலுக்கு அரசியல் கட்சியினர், பொதுமக்கள் என  பல தரப்பினரும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.




இந்நிலையில், கொரோனா தடுப்பூசி செலுத்த முன்பதிவு செய்யும் கோவின் இணையதளத்தில் தமிழ் மொழி சேர்க்கப்பட்டது. மத்திய அரசின் கோவின் இணையதளத்தில் 12ஆவது மொழியாக தமிழ் மொழி சேர்க்கப்பட்டுள்ளது.


முன்னதாக, இந்த இணையதளத்தில் தமிழ் மொழியை சேர்க்க வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியதை அடுத்து, கோவின் இணையதளம் படிப்படியாக வசதிகள் செய்யப்பட்டு வருவதாகவும், தொடர்ந்து இரண்டு நாட்களில் தமிழ் மொழி சேர்க்கப்படும் என்றும் மத்திய அரசு கூறியிருந்தது குறிப்பிடத்த்க்கது.


பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தனது டுவிட்டர் பக்கத்தில், “கொரோனா தடுப்பூசிக்கு பதிவு செய்வதற்கான கோவின் இணையதளத்தில் தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஒதியா உள்ளிட்ட 10 மாநில மொழிகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன. ஆனால், உலகின் மூத்த மொழியான தமிழ் சேர்க்கப்படாதது வருத்தமளிக்கிறது. கோவின் இணையதளத்தில் தமிழ் இல்லாததால் ஆங்கிலம் தெரியாதவர்களால் கொரோனா தடுப்பூசிக்கு முன்பதிவு செய்ய முடியவில்லை. கோவின் தளத்தில் தமிழையும் சேர்க்க முயற்சிகள் செய்யப்பட்ட நிலையில், உடனடியாக தமிழில் முன்பதிவு செய்யும் வசதி ஏற்படுத்தப்பட வேண்டும்’ எனப் பதிவிட்டிருந்தார்.


மேலும், மதுரை மக்களவை தொகுதி உறுப்பினர் எழுத்தாளர் சு.வெங்கடேசனும் தனது டுவிட்டர் பக்கத்தில், "கொரோனா தடுப்பூசிக்கு பதிவு செய்யும் இணையதளமான கோவின் ஆங்கிலத்திலும், இந்தியிலும் மட்டுமே இருந்த நிலையில் புதிதாக 9 மொழிகளில் கொண்டு வரப்பட்டுள்ளது. இதில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டுள்ளது கண்டிக்கத்தக்கது" என்று தனது கண்டனத்தை பதிவு செய்தியிருந்தார்.


Sputnik V Vaccine : சென்னை வந்தது ரஷ்யாவின் ஸ்புட்னிக் தடுப்பூசி!